பதிவு செய்த நாள்
19 மார்2017
03:49

புதுடில்லி : இங்கிலாந்தைச் சேர்ந்தபுல்லிட் குழுமம், உலகின் முதல் தெர்மல் ஸ்மார்ட் போனை, இந்தியாவில்அறிமுகப்படுத்தி உள்ளது.இது குறித்து, இக்குழுமத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் தலைமை அதிகாரி லிண்டா சம்மர்ஸ் கூறியதாவது:நிறுவனம், உலகின், முதல், ஒருங்கிணைந்த வெப்ப உணர்வறியும் கேமரா வசதி கொண்ட, ‘கேட் எஸ் 60’ எனும் தெர்மல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன் விற்பனை கடைகள் மற்றும் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும். இதன் விலை, 64,999 ரூபாய்.இந்த தெர்மல் போன், 4.5 அங்குல தொடுதிரையுடன், ஆண்ட்ராய்டு 6 ஆணைத் தொகுப்பில் இயங்கும்.தண்ணீருக்கு அடியில் உள்ள காட்சிகளை படம் பிடிக்கும் வசதி இதில் உள்ளது. காரிருளிலும், ‘பிளாஷ்’ உதவியின்றி, பொருட்களை காணவும், காஸ் சிலிண்டருக்குள் உள்ள, எரிவாயுவின் அளவை அறியவும் உதவும்.இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், நிறுவனத்தின்தயாரிப்பு மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என, எதிர்பார்க்கிறோம். உலகளவில், ‘கேட்’ பிராண்டில், ௧௦ லட்சத்திற்கும் மேற்பட்ட, ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|