பதிவு செய்த நாள்
19 மார்2017
03:50
சென்னை : எழுது பொருட்கள் துறையில் முன்னணியில் உள்ள, ஜி.எம்., பென்ஸ், ஜெர்மனி நாட்டின், ‘ஸ்னைடர் பென்ஸ்’ உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து, ஜி.எம்., பென்ஸ் இன்டர்நேஷனலின் இணை நிர்வாக இயக்குனர், இந்திரகுமார் மகேந்திரன் கூறியதாவது:நிறுவனம், ‘ரோரிட்டோ’ என்ற பிராண்டில், எழுது பொருட்கள் துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில், எழுது பொருட்கள் துறை சந்தை மதிப்பு, 5,500 கோடி ரூபாயாக உள்ளது. அதில், அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் பங்கு, 3,500 கோடி ரூபாய். எழுது பொருட்கள் துறையில், 60 சதவீதம், பள்ளி மாணவர்களை சார்ந்துள்ளது.ஜெர்மனியின், ‘ஸ்னைடர் பென்ஸ்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இரு நிறுவனங்களின் தொழில்நுட்பத்தில், தற்போது, ‘ரோரிட்டோ ரோபோமேக்ஸ், ரோரிட்டோ டெராமேக்ஸ்’ என்ற இரு புதிய பேனாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|