தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் திட்ட செலவுகளை சமாளித்தது எப்படி?தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் திட்ட செலவுகளை சமாளித்தது எப்படி? ... சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புத்­தி­சா­லித்­த­ன­மான ‘ஷாப்பிங்’ மூலம் சேமிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2017
00:52

ஷாப்பிங் செய்­வ­திலும் திட்­ட­மிட்டு செயல்­பட முடியும் என்றும், புத்­தி­சா­லித்­த­ன­மாக ஷாப்பிங் செய்­வதன் மூலம், அதிகம் சேமிக்க முடியும் என்றும் சொல்­கிறார், கெல்லி ஹான்காக். இதற்­கான வழி­களை அவர், ‘சேவிங் சவ்வி’ புத்­த­கத்தில் விவ­ரித்­துள்ளார்:
நீங்கள் வாங்க விரும்­பி­யது எதையும் குறைத்துக் கொள்­ளாமல், மாதாந்­திர மளிகை பில்லில், 50 சத­வீ­தத்­திற்கு மேல் மிச்சம் செய்ய முடிந்தால், எப்­படி இருக்கும்? இதன் மூலம், மற்ற எந்த செல­வு­க­ளுக்கு எல்லாம், பணம் ஒதுக்க முடியும். பணத்தை மிச்சம் செய்ய விரும்­பினால், அதற்­கான வழி இருக்­கி­றது. முதலில் நீங்கள் ஏன் பணத்தை மிச்சம் செய்ய விரும்­பு­கி­றீர்கள். ஏனெனில், அது உங்கள் குடும்பம் செய்ய முடி­யாத விஷ­யங்­களில், ஈடு­ப­டு­வதை சாத்­தி­ய­மாக்­கு­கி­றது. கடன் வாங்­காமல், பொருட்கள் வாங்க வழி செய்­கி­றது. புத்­தி­சா­லித்­த­ன­மாக ஷாப்பிங் செய்­வதன் மூலம் மிச்­ச­மாகும் பணம், எதிர்­கால சேமிப்­பா­கி­றது.
உங்கள் சூழ்­நி­லையும், நீங்கள் சேமிப்­ப­தற்­கான கார­ணங்கள் வேறு­பட்­டி­ருந்­தாலும், உங்­களால், செல­வு­களை கட்­டுப்­ப­டுத்திக் கொண்டு, சேமிக்கத் துவங்க முடியும். ஏற்­க­னவே, செல­வு­களை மிச்சம் செய்ய, நீங்கள் பல வழி­களை கடை­பி­டித்து வரலாம். அதற்கு மேலும் என்ன செய்­வது?புத்­தி­சா­லித்­த­ன­மாக ஷாப்பிங் செய்­வதன் மூலம், அன்­றாடம் பயன்­ப­டுத்தும் பொருட்­களை, முழு விலை கொடுத்து வாங்­கு­வதை தவிர்க்­கலாம். மொத்­த­மாக பொருட்­களை வாங்கி வைப்­பதன் மூலம், மளிகை பில்லை குறைக்­கலாம். மளிகை பொருட்­களை வாங்கும் முறையை மறு­ப­ரி­சீ­லனை செய்­யலாம். இதன் பின், மற்­ற­வர்­க­ளுடன் பகிர்ந்து கொள்ள நிறைய இருப்­பதை உண­ரலாம்.
புத்­தி­சா­லித்­த­ன­மாக பொருட்­களை வாங்­கு­வது என்­பது, உங்கள் பணத்­திற்கு அதிக மதிப்பு தரக்­கூ­டிய வகையில், திட்­ட­மிட்டு பொருட்­களை வாங்­கு­வ­தாகும். சேமிப்பு உங்­க­ளது நோக்­க­மாக இருந்தால், அதற்­கான நடை­முறை வழி­களை கண்­ட­றி­யலாம்.அதற்கு முன், சேமிப்­ப­தற்­கான இலக்கை தீர்­மா­னி­யுங்கள். அந்த இலக்கை, காகி­தத்தில் எழுதி வையுங்கள். இலக்­குகள் அதிகம் இருந்தால், அவற்றில் முக்­கி­ய­மா­ன­வற்றில் கவனம் செலுத்­துங்கள். உங்­களைப் போலவே, சேமிப்பில் ஆர்வம் கொண்­ட­வர்­க­ளுடன் பழ­குங்கள்.
முழு விலை கொடுத்து, பொருட்­களை வாங்­காமல் இருப்­ப­தற்­கான வழி­களை தேடுங்கள். அதா­வது, வேண்­டிய நேரத்­திற்கு சென்று, கிடைத்த விலைக்கு பொருட்­களை வாங்கி வரு­வ­தற்கு பதில், தள்­ளு­படி அல்­லது குறைந்த விலையில் கிடைக்கும் தர­மான பொருட்­களை மட்­டுமே வாங்க வேண்டும். இதற்­கேற்ப திட்­ட­மிட வேண்டும். இப்­படி புத்­தி­சா­லித்­த­ன­மாக திட்­ட­மி­டு­வது, இயல்­பாக மாறி­விடும் போது, உங்­க­ளுக்கு தேவை­யான பொருட்கள் எல்­லாமே, குறைந்த விலையில் கிடைப்­பதை உணர்­வீர்கள். எதிர்­பா­ராமல் வாங்கும் பொருட்­க­ளுக்­காக, செலவு செய்­வது குறையும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)