தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் திட்ட செலவுகளை சமாளித்தது எப்படி?தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் திட்ட செலவுகளை சமாளித்தது எப்படி? ... சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இணையம் மூலம் காப்­பீடு விற்­ப­னைக்கு புதிய விதி­மு­றைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2017
03:55

இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணையம், இணையம் மூலம் காப்­பீடு விற்­பனை செய்­வ­தற்­கான, புதிய விதி­மு­றை­களை வெளி­யிட்­டுள்­ளது.
காப்­பீடு துறைக்­கான டிஜிட்டல் மேடையை உரு­வாக்கும் வகையில், இணையம் மூலம் காப்­பீட்டு திட்­டங்­களை விற்­பனை செய்­வ­தற்­கான, புதிய விதி­மு­றை­களை இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வெளி­யிட்­டுள்­ளது. இ–காமர்ஸ் முறை மூலம் நிதிச்­சே­வை­களை மேலும் பர­வ­லாக்க முடியும் என கரு­தப்­ப­டு­கி­றது. இதன் ஒரு பகு­தி­யாக, இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை ஆணையம், இணையம் மூலம் காப்­பீட்டு திட்­டங்­களை வழங்­கு­வ­தற்­கான வரைவு நெறி­மு­றை­களை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளி­யிட்டு கருத்­துக்­களை கேட்­டி­ருந்­தது. இந்­நி­லையில், புதிய நெறி­மு­றை­களை, மார்ச் 9ம் தேதி, சுற்­ற­றிக்கை வாயி­லாக ஆணையம் வெளி­யிட்­டுள்­ளது.இணை­யத்தில் காப்­பீட்டு திட்­டங்­களை விற்­பனை செய்­வ­தற்­கான விதி­மு­றை­களை முறைப்­ப­டுத்தும் வகையில் இது அமைந்­துள்­ளது.
அனு­மதி வேண்டும்இதன்படி, டிஜிட்டல் மேடையில் காப்­பீடு திட்­டங்­களை வழங்க விரும்பும் அமைப்­புகள், காப்­பீடு சுய வலைப்­பின்னல் மேடை (ஐ.எஸ்.என்.பி.,) அமைத்து, விதி­களை பின்­பற்றி சேவை வழங்­கலாம். இந்த டிஜிட்டல் மேடை என்­பது இணை­ய­த­ள­மா­கவோ, மொபைல் செய­லி­யா­கவோ அல்­லது இரண்டும் இணைந்­த­தா­கவோ இருக்­கலாம்.ஏற்­க­னவே இணை­ய­தளம் மூலம் காப்­பீட்டு திட்­டங்­களை விற்­பனை செய்து வரும் காப்­பீடு நிறு­வ­னங்கள், இடை­முக நிறு­வ­னங்கள் மற்றும் காப்­பீட்டு திரட்டி சேவைகள், மூன்று மாத காலத்­திற்குள் ஐ.எஸ்.என்.பி.,க்கான அனு­மதி பெற வேண்டும். அவை புதிய விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு செயல்­பட வேண்டும். ஐ.எஸ்.என்.பி., இணை­ய­தளம் காப்­பீடு விற்­பனை மற்றும் சேவை தொடர்­பாக பய­னா­ளிகள் எதிர்­பார்க்க கூடிய அனைத்து விப­ரங்­களையும் கொண்­டி­ருக்கும்.
காப்­பீட்டில், இ–காமர்ஸ் வசதியை முறைப்­ப­டுத்­து­வ­தற்­கான வரைவு நெறி­மு­றைகள் வெளி­யிடப்­பட்ட போது, ‘பிளிப்கார்ட், அமேசான்’ உள்­ளிட்ட மின்­வ­ணிக தளங்­களும் பாலி­சி­களை விற்­பனை செய்ய, வழி செய்­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. காப்­பீடு வச­தியின் வீச்சை அதி­க­மாக்க இது உதவும் என்றும் கூறப்­பட்­டது. ஆனால், தற்­போது வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய விதி­முறை­களின் படி, காப்­பீடு விற்­பனை அனு­மதி பெற்ற நிறு­வ­னங்கள் மட்­டுமே இதில் ஈடு­பட முடியும். காப்­பீடு நிறு­வ­னங்கள், முக­வர்கள், வினி­யோக நிறு­வ­னங்கள் மற்றும் காப்­பீடு ஆணையம் அங்­கீ­க­ரித்த நிறு­வ­னங்கள் மட்­டுமே இணையம் மூலம் பாலி­சி­களை விற்­பனை செய்ய முடியும்.
விலை குறை­யுமா?அங்­கீ­காரம் பெறாத நிறு­வனம் இணையம் மூலம் காப்­பீடு விற்­பனை செய்­வது விதி மீற­லாக கரு­தப்­படும். அது மட்டும் அல்­லாமல், நிறு­வ­னங்கள் பிற தளங்­களில் இருந்து இணைய போக்­கு­வ­ரத்து மூலம் செய்­யப்­படும் பரிந்­து­ரை­களை ஏற்க கூடாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாலிசி கட்­ட­ணத்தை பொறுத்­த­வரை, ஐ.எஸ்.என்.பி., மூலம் அதா­வது, இணையம் மூலம் வழங்­கப்­படும் பாலி­சி­க­ளுக்கு மாறு­பட்ட விலையை நிர்­ண­யித்­துக் ­கொள்­ளலாம். எனினும், இந்த தொகை­யா­னது நிறு­வனம் மற்றும் தரகர் உள்­ளிட்ட பிற அமைப்­புகள் வழங்கும் சேவைக்கு ஒன்­றா­கவே இருக்கும். முகவர் ஒருவர் பலகை கணினி வழியே பாலி­சியை விற்­பனை செய்­தாலும் அதற்­கான தொகை ஒன்­றா­கவே இருக்கும். மேலும், டிஜிட்டல் பண பரி­வர்த்­தனை சேவைகள் வழங்கும் நிறு­வ­னங்கள் கேஷ்பேக் போன்ற சலு­கைகள் அளிக்­கப்­ப­டக்­கூ­டாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காசோலை அல்­லது ரொக்­க­மா­கவும் பணம் செலுத்தும் வசதி அளிக்­கப்­படும்.
டிஜிட்டல் மேடைவிதி­மு­றை­களின் படி, இ – இன்­சூரன்ஸ் கணக்கு எனப்­படும் மின்­னணு காப்­பீடு கணக்கு வசதி அவ­சியம். இந்த வசதி டிஜிட்டல் வடிவில் பாலி­சி­களை பெற்­றுக்­கொள்ள வழி செய்­கி­றது. பாலிசி விற்­பனை செய்த, 15 நாட்­க­ளுக்குள் இத்­த­கைய கணக்கை பெற வேண்டும். மேலும், வாடிக்­கை­யா­ளர்கள் டிஜிட்டல் முறையில் பாலி­சி­களை வாங்க பதிவு செய்து கொண்ட இ–மெயில் முக­வரி அல்­லது மொபைல்போன் எண் தேவை. எனினும், இது தொடர்­பாக மேலும் தெளிவு தேவைப்­ப­டு­வ­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.
பாலிசி வாங்­கு­வ­தற்கு தேவை­யான, கே.ஒய்.சி., நடை­மு­றையை மின்­னணு, கே.ஒய்.சி., மூலம் மேற்­கொள்­ளலாம். ஆதார் அல்­லது மின்­னணு பான் வச­தியை இதற்­காக பயன்­ப­டுத்­திக்­ கொள்­ளலாம். இணையம் மூலம் காப்­பீட்டு திட்­டங்­களை பெறும் முறையில், இந்த விதி­மு­றைகள் மாற்­றத்தை கொண்டு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)