தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் திட்ட செலவுகளை சமாளித்தது எப்படி?தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் திட்ட செலவுகளை சமாளித்தது எப்படி? ... இலக்கு தவறி செல்லும் தங்கம் டிபாசிட் திட்டம் இலக்கு தவறி செல்லும் தங்கம் டிபாசிட் திட்டம் ...
சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2017
04:32

பா.ஜ.வின் உத்­தர பிர­தேச வெற்­றியை, பங்கு சந்தை இந்த வாரம் முழு­வதும் கொண்­டா­டி­யது. அமெ­ரிக்க பெடெரல் ரிசர்வ் எடுத்த, வட்டி விகித கூட்டல் முடிவும், சந்­தையின் போக்கை அதிகம் மாற்­ற­வில்லை. அமெ­ரிக்­காவில் வட்டி விகிதம் கூடிய நிலையில், நம் பங்கு சந்­தையின் இந்த அப­ரி­மி­த­மான போக்கு அனை­வ­ரையும் ஆச்­சர்­யத்தில் ஆழ்த்­தி­யது.
தனக்கு சாத­க­மான செய்­தி­க­ளுக்கு ஏற்றம் கொள்­வதும், பாத­க­மான செய்­தி­களை புறம் தள்­ளு­வதும், சந்­தையில் அச்­ச­மற்ற நிலை இருப்­ப­தற்­கான தோற்­றத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதற்கு, தேசிய பங்கு சந்­தையின், விக்ஸ் (VIX) என்ற குறி­யீடு ஒரு முக்­கிய சான்று. விக்ஸ் என்­பது சந்­தையில் நிலவும் அச்சம் மற்றும் பேரா­சையை வெளிப்­ப­டுத்தும், உல­க­ளா­விய ஓர் அள­வுகோல். இந்த விக்ஸ் என்­பது எண்­க­ளா­லான குறி­யீடு. சந்­தையில் ஒவ்­வொரு வினாடியும், முத­லீட்­டா­ளர்­களின் நகர்­வு­களை உன்­னிப்­பாக கவ­னிப்­பதன் வெளிப்­பா­டு தான் இந்த விக்ஸ். தற்­போது, இந்­தியா விக்ஸ் 11.8525 ஆக உள்­ளது. இதன், 52 வார குறைந்­த ­பட்ச அளவு, 10.3875. சந்­தையில் அச்சம் குறை­வாக இருப்­ப­தையே இது வெளிப்­ப­டுத்­து­கி­றது.
சவால்பொது­வாக, இத்­த­கைய சூழல் சந்­தையில் அதிக நேரம் நிலைப்பது இல்லை. அப்­படி நிலைத்தால், அது சந்­தையின் கிடு­கிடு ஏற்­றத்தில் முடியும். வரும் வாரத்தில் இந்த குறி­யீடு கூர்ந்து கவ­னிக்­கப்­பட வேண்­டிய ஒன்று. பெடெரல் ரிசர்வ் இந்த ஆண்டு தொடர்ந்து இரு­முறை வட்டி விகித ஏற்ற நட­வ­டிக்கை மேற்­கொள்ளும் என்ற அறி­குறி நமக்கு கிடைத்­தி­ருக்­கி­றது. இது அமெ­ரிக்க பொரு­ளா­தார வளர்ச்­சியில் காட்­டப்­படும் நம்­பிக்­கை­யையே வெளிப்­ப­டுத்­து­கி­றது. உலக முத­லீ­டுகள், அமெ­ரிக்­கா­விற்கு அதிகம் ஒதுக்­கப்­படும் சூழல் நிச்­சயம் உரு­வாகும். அமெ­ரிக்­காவில் வட்டி விகிதம் கூடும்­போது, அது உலகம் தழு­விய பொரு­ளா­தார பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தும்.
பிற நாடு­களும் தங்கள் வட்டி விகிதம் சார்ந்த கொள்­கை­களை தங்கள் முத­லீட்டு தேவை­களை பாதிக்­காத வண்ணம் அமைக்கும் நிலைக்கு தள்­ளப்­படும். இது உலகம் தழு­விய மாற்­றங்­களை ஏற்படுத்தும். நம் நாட்டில் வட்டி விகித குறைப்­புக்கு, அமெ­ரிக்க கொள்கை மாற்றம் சவா­லாக அமையும்.
சூழல்எனினும், இந்­திய முத­லீ­டு­களும் தொடர்ந்து வளர வேண்­டு­மெனில், தொடர்ந்து வெளி­வரும் நம் வளர்ச்சி குறி­யீ­டுகள் சிறப்­பாக அமைய வேண்டும். இந்த வாரம் வெளி­வந்த நிறு­வ­னங்­களின் முன்­வரி வசூல் சற்று மந்­த­மா­கவே அமைந்­துள்­ளது. மொத்­த­விலை பண­வீக்­கமும் அதி­க­மா­கவே நில­வு­கி­றது. மேலும், ஜி.எஸ்.டி., சார்ந்த, ஐந்து வரிச்­சட்­டங்கள் நிறை­வேறி உள்­ளன. இந்த தக­வல்­களின் மேல் சந்தை அதிக ஆய்வு செய்­ய­வில்லை. வரும் வாரங்­களில் நிறு­வ­னங்கள் சார்ந்த ஆய்­வு­களும், பாதிப்­பு­களும் வெளி­வரும். அந்த தக­வல்கள் குறிப்­பிட்ட நிறு­வ­னங்­களின் பங்­கு­களை எப்­படி பாதிக்­கின்­றன என்­பதை முத­லீட்­டா­ளர்கள் புரிந்­து­ணர்­வது அவ­சியம்.
அன்­னிய முத­லீட்­டா­ளர்கள் புதிய வேகத்­துடன் நம் சந்தை பக்கம் கவனம் செலுத்த துவங்கி உள்­ளனர். இந்த வேகம் நிலைக்க தேவை­யான பொரு­ளா­தார சூழல் விரைவில் ஏற்­பட வேண்டும். இல்­லா­விட்டால், சந்­தையின் தற்­போ­தைய ஏற்றம் தொடர்­வது கடினம் என்றே தோன்­று­கி­றது. ஆனாலும், தொடர்ந்து, சந்­தைக்கு பண­வ­ரத்து மிக அதி­க­மாக உள்ள சூழலில், சந்­தையில் பெரிய சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை என்றே தோன்­று­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)