சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்சரி­வுக்­கான சூழல் தற்­போது இல்லை: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.37 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.37 ...
இலக்கு தவறி செல்லும் தங்கம் டிபாசிட் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2017
04:33

மும்பை : மத்­திய அரசின் தங்கம் டிபாசிட் திட்டம், மக்­க­ளிடம் எதிர்­பார்த்த வர­வேற்பை பெறாமல் தள்­ளாடி வரு­கி­றது.
தங்கம் இறக்­கு­ம­தியில், சீனா­விற்கு அடுத்து, இரண்­டா­வது இடத்தில் இந்­தியா உள்­ளது.இங்கு, ஆண்­டுக்கு, சரா­ச­ரி­யாக, 800 டன் தங்கம் இறக்­கு­மதி ஆனதால், நாட்டின் கடன் சுமை அதி­க­ரித்து வந்­தது. இதை குறைப்­பதற்­காக, தங்கம் இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில், மத்­திய அரசு, 2015, நவம்­பரில், தங்கம் சேமிப்பு திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.
இந்­தி­யாவில், 25 ஆயிரம் டன் தங்கம், குடும்­பங்கள் மற்றும் கோவில்­களில் முடங்­கி­யுள்­ள­தாக, ஒரு புள்ளி விபரம் கூறு­கி­றது. வீடு­களில் மட்டும், 24 ஆயிரம் டன் தங்கம் உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. அதில், ஓர­ளவை சந்­தைக்கு கொண்டு வர, தங்க டிபாசிட் திட்டம் உதவும்; அதன் மூலம், தங்கம் புழக்கம் அதி­க­ரித்து, இறக்­கு­மதி குறையும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது.
விருப்பமின்மைஇத்­திட்­டத்தின் கீழ், வங்­கியில் 1 – 15 ஆண்­டுகள் வரை, டிபாசிட் செய்­யப்­படும் தங்க நகை­க­ளுக்கு, 2.5 சத­வீத ஆண்டு வட்­டியும், வட்டி வரு­வாய்க்கு வரு­மான வரி, மூல­தன வரி விலக்கு சலு­கை­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. டிபாசிட் முதிர்­வின்­போது, தங்­கத்தின் மதிப்பை பொறுத்து, பண­மா­கவோ, தங்­க­மா­கவோ பெற்றுக் கொள்ளும் வச­தியும் உள்­ளது. இத்­த­கைய சலு­கைகள் அளித்தும், கடந்த 16 மாதங்­களில், கோவில்கள் மற்றும் குடும்­பங்­களில் இருந்து, 7 டன் தங்கம் மட்­டுமே, வங்­கி­களில் டிபாசிட் செய்­யப்­பட்டுள்­ளது. அதிலும், கோவில்கள் தான், பெரும்­பான்மை தங்­கத்தை டிபாசிட் செய்­துள்­ளன.
இந்த திட்டம் மக்­களின் வர­வேற்பை இழந்­த­தற்கு, பல கார­ணங்கள் உள்­ளன. மக்கள், தங்­களின் பாரம்­ப­ரிய தங்க நகைகள், வங்­கியில் டிபாசிட் செய்­யப்­பட்டு, உருக்­கப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை. இத்­திட்­டத்தில், தங்­கத்தின் தரத்தை சோதிப்­பது, உருக்­கு­வது போன்­ற­வற்­றுக்­கான செலவு, டிபா­சிட்­ தா­ரர்­களின் தலையில் விழு­கி­றது. மேலும், வங்­கியில் டிபாசிட் பணத்­திற்கு, 7 – 8 சத­வீதம் வட்டி கிடைக்­கையில், 2.5 சத­வீத வட்டி மற்றும் வரிச் சலு­கை­க­ளுக்­காக, தங்­கத்தை டிபாசிட் செய்­யவும் மக்கள் விரும்­பு­வ­தில்லை.
வங்கிகள் அணுகுமுறைஇது ஒரு­புறம் என்றால், வங்­கி­களும், தங்க நகை கட­னுக்கு கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை, தங்க டிபாசிட் திட்­டத்­திற்கு கொடுக்­காமல் உள்­ளன.அதற்­கான நடை­மு­றை­களை தெளி­வாக அறி­யா­ததால், வங்கி ஊழி­யர்கள், தங்க டிபாசிட் திட்­டமே தங்கள் கிளையில் இல்லை என, டிபாசிட் செய்ய வரு­வோரை திருப்பி அனுப்பி விடு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. அதனால், தங்க டிபாசிட் திட்­டத்தை, மறு­ஆய்­வு­செய்து, கவர்ச்­சி­க­ர­மான சலு­கை­க­ளுடன் அறி­மு­கப்­ப­டுத்­தினால் மட்­டுமே, மக்­க­ளிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஈர்க்க முடியும். அதன் மூலம், எதிர்­பார்த்த அள­விற்கு, தங்கம் இறக்­கு­மதி குறையும் என, இத்­துறை சார்ந்­த­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)