போன் செய்தால் போதும் தபால்காரர் வீட்டுக்கு வருவார்போன் செய்தால் போதும் தபால்காரர் வீட்டுக்கு வருவார் ... வளைகுடாவில் 10 லட்சம் 'வளைகரங்கள்' வளைகுடாவில் 10 லட்சம் 'வளைகரங்கள்' ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
குறைந்த விலையில் ஐபேட் : ஆப்பிள் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2017
14:45

சான்பிரான்சிஸ்கோ : ஆப்பிள் நிறுவனம், தாங்கள் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள ஐபேட்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.ஐபேட் மினி 4, இரண்டு ஐபேட் ப்ரோ சாதனங்கள் மற்றும் புதிய ஐபேட் உள்ளிட்ட சாதனங்களை ஆப்பிள் வெளியிட்டுள்ளது. புதிய ஐபேட் சாதனங்கள் மார்ச் 24 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகின்றது.
ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபேட் 9.7 இன்ச் திரை கொண்ட மாடல் 329 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 21,528) என இதுவரை இல்லாத அளவு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 9.7 இன்ச், 32 ஜிபி மெமரி, வை-பை கொண்ட ஐபேட் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை ரூ.28,900 என்றும், 32ஜிபி, வை-பை மற்றும் செல்லுலார் மாடல் ரூ.39,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 128 ஜிபி மெமரி கொண்ட ஐபேட் மினி 4 விலை 399 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.34,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஐபேட் சாதனங்களில் அதிவேக A9 சிப் மற்றும் பிரகாசமான திரை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஐபேட் ஏர் 2-வை விட சற்றே பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களின் சிவப்பு நிற ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதே போல் ஐபோன் SE மாடல் 32 மற்றும் 128 ஜிபி மெமரிக்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய சாதனங்களுடன் வீடியோக்களை உருவாக்கி, அதனை ஐஓஎஸ் சாதனங்களை பயன்படுத்தும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கும் செயலியையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. கிளிப்ஸ் என பெயரிடப்பட்டுள்ள புதிய செயலியில் வீடியோக்களை அழகாக்க பல்வேறு வசதிகளும், இவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது ஆப்பிளின் சொந்த குறுந்தகவல் செயலிகளில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)