பொது துறை நிறுவனங்களின் இழப்பில் செயில் – பி.எஸ்.என்.எல்., – ஏர் இந்தியா முன்னணிபொது துறை நிறுவனங்களின் இழப்பில் செயில் – பி.எஸ்.என்.எல்., – ஏர் இந்தியா ... ... கொப்பரை கொள்முதல் விலை உயர்வு : மத்திய அரசு பரிந்துரைக்கு வரவேற்பு கொப்பரை கொள்முதல் விலை உயர்வு : மத்திய அரசு பரிந்துரைக்கு வரவேற்பு ...
உதிரி பாகங்கள் சந்தை ரூ.75,705 கோடியை எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2017
02:02

புதுடில்லி:‘வாக­னங்­களின் விற்­ப­னைக்கு பின் தேவைப்­படும் உதிரி பாகங்­கள் சந்தை, 2019 – 20ம் நிதி­யாண்­டில், 75,705 கோடி ரூபா­யாக உய­ரும்’ என, ‘அக்மா’ எனப்­படும், இந்­திய வாகன உதிரி பாகங்­கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பு தெரி­வித்து உள்­ளது.
அதன் விப­ரம்:சந்­தை­யில் வாக­னங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின், அவற்­றின் தேய்­மா­னத்தை பொறுத்து, உதிரி பாகங்­கள் மாற்­றப்­ப­டு­கின்றன. இத்­த­கைய, உதிரி பாகங்­க­ளுக்­கான சந்தை, சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கிறது.
நடப்பு நிதி­யாண்­டில், இத்­த­கைய உதிரி பாகங்­கள் சந்­தை­யின் மதிப்பு, 56,098 கோடி ரூபா­யாக உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இது, ஆண்­டுக்கு, சரா­ச­ரி­யாக, 10.5 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 2020 – 21ம் நிதி­யாண்­டில், 75,705 கோடி ரூபா­யாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
வளர்ச்சி
வாகன விற்­ப­னைக்கு பிந்­தைய உதிரி பாகங்­கள் சந்­தை­யில், தற்­போது, இரண்டு மற்­றும் மூன்று சக்­கர வாக­னங்­களின் பங்­க­ளிப்பு, 12,038 கோடி ரூபா­யாக உள்­ளது.
பய­ணி­கள் கார், வர்த்­தக வாக­னம், டிராக்­டர் ஆகி­ய­வற்­றின் பங்­க­ளிப்பு, முறையே, 18,970 கோடி ரூபாய், 19,748 கோடி ரூபாய் மற்­றும் 5,342 கோடி ரூபாய் என்ற அள­வில் உள்­ளது.வரும், 2026ல், வாகன உற்­பத்தி திட்­டத்­திற்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்­கிற்கு ஏற்ப, வாகன விற்­ப­னைக்கு பிந்­தைய உதிரி பாகங்­கள் துறை, வளர்ச்சி கண்டு வரு­கிறது.அத­னால், இத்­து­றை­யின் சந்தை மதிப்பு, இலக்கு ஆண்­டில், 1.79 – 2 லட்­சம் கோடி ரூபா­யாக உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
பய­ணி­கள் வாக­னங்­க­ளுக்­கான உதிரி பாகங்­கள் சந்­தை­யில், தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு, 40 சத­வீ­தம் என்ற அள­விற்கே உள்­ளது. எஞ்­சிய, 60 சத­வீத பங்­க­ளிப்பை, தனி நிறு­வ­னங்­கள் மற்­றும் அமைப்பு சாரா துறை­யி­னர் வழங்கி வரு­கின்­ற­னர்.
வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான உதிரி பாகங்­கள் துறை­யில், தனி நிறு­வ­னங்­களின் தயா­ரிப்­பு­கள், 50 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்ளன. அதே சம­யம், டிராக்­டர்­க­ளுக்­கான உதிரி பாகங்­கள் சந்­தை­யில், அமைப்பு சாரா துறை­யி­ன­ரின் பங்­க­ளிப்பு, 40 சத­வீ­த­மாக உள்­ளது.
போலீகள்
வாகன உதிரி பாகங்­கள் துறை­யில், பெரும் பிரச்­னை­யாக உரு­வெ­டுத்து வந்த, போலி உதிரி பாகங்­களின் புழக்­கம், தற்­போது வெகு­வாக குறைந்து வரு­கிறது. 2010 – 11ம் நிதி­யாண்­டில், உதிரி பாகங்­கள் சந்­தை­யில், போலி­களின் பங்கு, 36 சத­வீ­த­மாக இருந்­தது. இது, நடப்பு நிதி­யாண்­டில், 5 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.வாகன விற்­ப­னைக்கு பிந்­தைய உதிரி பாகங்­க­ளின தரத்தை நிர்­ண­யிக்க, உரிய விதி­மு­றை­கள் தற்­போது இல்லை. மக்­களின் பாது­காப்பு தொடர்­பான இப்­பி­ரச்­னைக்கு, தீர்வு காண்­ப­தற்­கான திட்­டத்தை உரு­வாக்­கு­வ­தில், மத்­திய அர­சு­டன், கூட்­ட­மைப்பு இணைந்து செயல்­பட்டு வரு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)