பதிவு செய்த நாள்
25 மார்2017
10:36

கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தும் மத்திய அரசின் பரிந்துரையை, தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர். நெல், கரும்பு, கொப்பரை உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களுக்கான, குறைந்தபட்ச ஆதார விலையை, மத்திய அரசு நிர்ணயிக்கிறது. கடந்தாண்டு, மத்திய அரசு, 100 கிலோ அரவை கொப்பரைக்கு, 5,950 ரூபாய்; பந்து கொப்பரைக்கு, 6,420 ரூபாய், கொள்முதல் விலையாக நிர்ணயித்தது. இந்தாண்டு, அரவை கொப்பரைக்கு, 6,500 ரூபாய், பந்து கொப்பரைக்கு, 6,785 ரூபாய், கொள்முதல் விலையாக நிர்ணயிக்க, பிரதமர் நரேந்திர மோடி, ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய வேளாண் விளைபொருள் விலை நிர்ணய கமிட்டி, இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில், வெளியிட உள்ளது. தமிழகத்தில், வறட்சியால், கொப்பரை உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலை யில், கொப்பரை கொள்முதல் விலையை உயர்த்துவது, விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விலை உயர்வால், தமிழகத்தில், தென்னை சாகுபடி நடக்கும், 20 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|