பதிவு செய்த நாள்
26 மார்2017
02:00

புதுடில்லி : கொச்சின் ஷிப் யார்டு, பங்கு வெளியீட்டின் மூலம், 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த கொச்சின் ஷிப் யார்டு நிறுவனம், கேரள மாநிலம், கொச்சியில், துறைமுக வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், துறைமுக விரிவாக்க பணியில் ஈடுபட இருப்பதுடன், சர்வதேச வணிகத்தில், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இவற்றுக்கு தேவைப்படும் நிதியை, பங்குச் சந்தையில், பங்குகளை வெளியிட்டு, 1,400 – 1,500 கோடி ரூபாய் அளவுக்கு திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் அனுமதி கேட்டு, வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கொச்சின் ஷிப் யார்டு பங்கு வெளியீட்டு மேலாண்மை பணிகளை, எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், எடெல்வைஸ் பைனான்சியல் சர்வீசஸ், ஜே.எம்., பைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டிஸ் ஆகியவை மேற்கொள்ள உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|