பதிவு செய்த நாள்
26 மார்2017
02:01

புதுடில்லி : ரேமண்ட் நிறுவனத்திடமிருந்து, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, காதி துணிகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை, கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையமான – கே.வி.ஐ.சி., பெற்றுள்ளது.இது குறித்து, கே.வி.ஐ.சி., தலைவர், வி.கே.சக்சேனா கூறியதாவது:ரேமண்ட் நிறுவனத்திற்கு, 98 ஆயிரம் மீட்டர், காதி துணி சப்ளை செய்வதற்கான ஆர்டரை பெற்று உள்ளோம். இதன் மதிப்பு, இரண்டு கோடி ரூபாய். இதுவே, கே.வி.ஐ.சி., இதுவரை பெற்ற அதிகபட்ச மதிப்புள்ள ஆர்டர் ஆகும்.கைவினைஞர்களின் நலனையே, கே.வி.ஐ.சி., இலக்காக கொண்டு செயல்படுகிறது. அதனால், இது போன்ற பிரத்யேக ஆர்டர்கள் வாயிலாக கிடைக்கும் லாபத்தில், 5 சதவீதம், சம்பந்தப்பட்ட கைவினைஞர்கள் பிரிவுக்கு வழங்கப்படும்.கார்ப்பரேட் மற்றும் தனியார் துறையில், காதி தயாரிப்புகள் நுழைவதன் மூலம், கே.வி.ஐ.சி., உள்ள, கைவினைஞர்கள் நிலையான வேலை மற்றும் வாழ்வாதாரத்தை பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த ஆண்டு டிசம்பரில், ரேமண்ட் நிறுவனத்துடன், கே.வி.ஐ.சி., ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|