பதிவு செய்த நாள்
26 மார்2017
02:07

புதுடில்லி : சர்வதேச சிமென்ட் உற்பத்தியில், இந்தியாவின் பங்கு மிகவும் குறைவாக உள்ளதாக, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் இணை செயலர் ரன்வீத் கவுர் தெரிவித்து உள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:சிமென்ட் உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் தேவைப்படும் மொத்த சிமென்டில், இந்தியாவில், 7 சதவீதம் மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உள்நாட்டில், தனிநபர் சிமென்ட் பயன்பாடு குறைவாக உள்ளது. நீண்டகால அடிப்படையில், அதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிமென்ட் உற்பத்திக்கு, மாற்று எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது, அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல், 1 சதவீதம் மட்டும் சிமென்ட் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அது, சர்வதேச அளவில், 60 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|