பதிவு செய்த நாள்
26 மார்2017
02:07

புதுடில்லி : மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, பார்லிமென்டில் கூறியதாவது:தேசிய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற பெயரில், வரையறுக்கப்பட்ட வங்கி சேவையை துவக்கியுள்ளது.நாடு முழுவதும் உள்ள, அஞ்சலக கிளைகளில், இவ்வங்கி சேவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஏராளமான பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை, இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் உடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளன.இது குறித்து, அஞ்சல் துறை பரிசீலித்து வருகிறது. சாதாரண மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை ஆராய்ந்து, அதன் பின்னே, விண்ணப்பித்த வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்கின் கணினி ஒருங்கிணைப்பு பணிகளுக்கு, கடந்த ஆண்டு, ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. அதில், ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. அதனால், மீண்டும், ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதையடுத்து, விண்ணப்பித்த இரு நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகள், தற்போது பரிசீலனையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|