பதிவு செய்த நாள்
26 மார்2017
02:08

புதுடில்லி : ‘‘சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தும் வரை, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க காத்திருக்க வேண்டியதிருக்கும்,’’ என, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, அமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனத்துக்கு, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில், தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனம், இந்தியாவில் தொழிற்சாலை துவங்குவதற்கு, மத்திய அரசிடம் இருந்து, வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கேட்டுள்ளது. ஆனால், அந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை.தொழிற்சாலை அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், 30 சதவீத உபகரணங்களை, உள்ளூர் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. அதை தளர்த்துமாறு, ஆப்பிள் விடுத்த கோரிக்கையையும், மத்திய அரசு நிராகரித்துள்ளது.இது குறித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:சரக்கு மற்றும் சேவை வரி, விரைவில் அமலுக்கு வர உள்ளது; அதனால், வரிச்சலுகை கோரும் ஆப்பிள் நிறுவனம், அதுவரை காத்திருக்கும் என, தெரிகிறது. வரிச்சலுகை கோரி, அந்நிறுவனம் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|