பதிவு செய்த நாள்
26 மார்2017
02:09

புதுடில்லி : ‘சிறிய, நடுத்தர நிறுவனங்கள், நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தினால், அவற்றின் வருவாய், 27 சதவீதம் உயரும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பான, அசோசெம், ‘டிலாய்டி’ நிறுவனத்துடன் இணைந்து, ‘டிஜிட்டல் இந்தியா: லட்சம் கோடி டாலர் வாய்ப்புகளின் திறவுகோல்’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.அதன் விபரம்:இந்தியாவில், சுலபமாக தொழில் துவங்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.வர்த்தகத்திற்கான, ‘இபிஸ்’ வலைதளம் அறிமுகம் உட்பட, பல்வேறு பிரிவு களில், மின்னணு நிர்வாக நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தற்போது, ஓரளவு எளிதாக தொழில் துவங்க முடிகிறது. இது, மேலும் சுலபமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளதால், அவற்றின் மூலம், நிறுவனங்கள், வர்த்தக நடைமுறைகளை சுலபமாக ஒருங்கிணைக்க முடிகிறது. அதனால், புதிய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான செலவும், நேரமும் குறைகிறது.குறிப்பாக, ‘டெலிபிரசன்ஸ்’ எனப்படும், காணொலி காட்சி வசதியை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, வர்த்தகம் சார்ந்த பயணச் செலவு, 20 சதவீதம் குறைகிறது. இதன் மூலம், உலகளவில், 10 லட்சம் டன் அளவிலான கரியமில வாயு வெளியேறுவது தடுக்கப்படுகிறது.மேலும், ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ எனப்படும், மேகக் கணினி தொழில்நுட்பத்தில், மின்னணு ஆவணங்களை சேமிப்பதன் மூலம், நிறுவனங்கள், காகிதங்களுக்கு செலவிடுவது குறைகிறது.நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள், பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கின்றன. அதனால் மகிழ்ச்சியடையும் பணியாளர்கள், கூடுதல் பணிகளை செய்கின்றனர். இது, நிறுவனங்களின் உற்பத்தி திறனை உயர்த்த வழிவகுக்கிறது. பாரம்பரிய வர்த்தக நடைமுறையை விரும்பும் பணியாளர்களை விட, 8 மடங்கு அதிக பணியாளர்கள், நவீன டிஜிட்டல் வசதியுள்ள நிறுவனங்களை விரும்புகின்றனர்.இத்தகைய அம்சங்களின் அடிப்படையில், வர்த்தகத்தில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களின் வருவாய், 27 சதவீதம் உயரும்; வேலைவாய்ப்பு, 84 சதவீதம் அதிகரிக்கும். சர்வதேச சந்தையில், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பின்பற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பங்கு, 65 சதவீதம் உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கிராமப்புற பயன்பாடுமத்திய அரசு, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் மூலம், இணைய வசதிகளை பரவலாக்கி, கிராமப்புறங்களிலும், டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|