‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 சதவீதம் உயரும்‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.13 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.13 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி திட்­ட­மி­டலில் உதவும் செய­லிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2017
03:07

மொபைல் வாலெட்கள், பண பரி­வர்த்­தனை செய­லிகள் போலவே நிதி திட்­ட­மி­ட­லுக்கு உதவும் ஸ்மார்ட்போன் செய­லி­களும் அனேகம் இருக்­கின்­றன. இவற்றை பயன்­ப­டுத்­து­வதன் மூலம் தனி­ந­பர்கள் தங்கள் நிதி நிர்­வா­கத்தை சீராக்கிக் கொள்­ளலாம்.
எல்­லாமே டிஜிட்­டல்­ம­ய­மாகி வரும் உலகில், நிதி திட்­ட­மிடல் செய­லி­களை கொண்டு நிதி நிர்­வா­கத்­தையும் மேம்­ப­டுத்திக் கொள்­ளலாம்.
திட்­ட­மிடல்செய­லி­களை பயன்­ப­டுத்­து­வதன் மூலம் நேரத்தை மிச்­சம் ஆக்­கலாம். நிதி விஷ­யங்கள் தொடர்­பான கேள்­விகள், சந்­தே­கங்கள் இருந்தால், அவற்றை செய­லிகள் மூலம் உட­ன­டி­யாக நிவர்த்தி செய்து கொள்­ளலாம். அதே போல நிதி இலக்­கு­களை திட்­ட­மிட காகிதம், பேனா என அலை­யாமல், செயலி மூலம் மேற்­கொள்­ளலாம். செய­லிகள் அளிக்கும் நினை­வூட்டல் வச­தியை கொண்டு கட்­டணம் செலுத்­து­வது, பிரீ­மியம் செலுத்­து­வது, கிரெடிட் கார்டு தொகையை செலுத்­து­வது போன்­ற­வற்­றையும் குறித்த காலத்தில், நினைவில் கொள்­ளலாம். இதற்­கான அறி­விப்­பு­களை நினை­வூட்­ட­லாக பெறும் வச­தியும் அளிக்­கப்­ப­டு­கி­றது.
இது போலவே மாதாந்­திர பட்­ஜெட்­டையும் திட்­ட­மி­டலாம். ஒவ்­வொரு பிரி­விலும் செல­வுக்­கான பணத்தை ஒதுக்­கு­வது, அதற்­கேற்ப செலவு செய்­கி­றோமா என்­பதை கண்­கா­ணிப்­பது என, பட்­ஜெட்டை பின்­பற்றி நடப்­பதும் எளிது. பல செய­லிகள் வங்­கிகள் அனுப்பி வைக்கும் குறுஞ்­செய்­தி­களில் இருந்தே செல­வு­களை கணக்­கிட்டு, ஒவ்­வொரு பிரி­விலும் செல­வி­டப்­படும் தொகையை சுட்­டிக்­காட்­டு­கின்­றன. செல­வு­களை வரை­ப­ட­மாக புரிய வைக்கும் வச­தி­யும் உண்டு.
வங்கி செய­லிகள்நிதி திட்­ட­மிடல் செய­லிகள் தவிர வங்­கி­களின் அதி­கா­ர­பூர்வ செய­லி­க­ளையும் பயன்­ப­டுத்­தலாம். பாஸ்புக் அப்டேட் செய்­வது, அறிக்கை பெறு­வது, வைப்பு நிதி வட்டி விகிதம் தொடர்­பான தகவல் அறி­வது போன்­ற­வற்றை செய­லிகள் மூலமே தெரிந்து கொள்­ளலாம். வட்டி விகிதம் உள்­ளிட்ட விஷ­யங்­களை கணக்­கிடும் தேவை­யி­ருந்­தாலும், நிதி செய­லிகள் அதற்­கான கால்­கு­லேட்­டரை அளிக்­கின்­றன. மியூச்­சுவல் பண்ட், காப்­பீடு தொடர்­பான விப­ரங்­க­ளையும் அணு­கலாம். இந்த செய­லி­களை எந்த நேரத்தில் வேண்­டு­மா­னாலும், பயன்­ப­டுத்­தலாம் என்­பது சிறப்­பம்­ச­மாகும். ஆண்ட்­ரோ­மணி, வால்நெட், குட்­பட்ஜெட், எம்­டி­ராக்கர், மணி­வியூ உள்­ளிட்ட செய­லிகள் இந்த பிரிவில் செயல்­பட்டு வரு­கின்­றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)