‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 சதவீதம் உயரும்‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.13 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.13 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2017
03:13

கச்சா எண்ணெய்
இம்­மாத ஆரம்பம் முதலே கச்சா எண்ணெய் விலை சரிவை சந்­தித்­தது. அதா­வது, 10 சத­வீதம் விலை குறைந்து, 48.12 டால­ராக வர்த்­த­க­மா­கி­றது. (பிப்­ர­வரி மாதம் இதன் விலை, பீப்பாய் 55 டாலர் வரை உயர்ந்து காணப்­பட்­டது.) சர்­வ­தேச சந்­தையில் வரவு அதி­க­ரிப்பு இந்த விலை வீழ்ச்­சிக்கு கார­ண­மாக கூறப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்­காவில் ஷேல் ஆயில் எனப்­படும் பாறை­க­ளுக்­கி­டையே ஆழ்­குழாய் அமைத்து எடுக்கும் எண்ணெய் உற்­பத்தி உயர்ந்து, தின­சரி 4,17,000 பீப்­பாய்­க­ளாக அதி­க­ரித்­ததும் விலை வீழ்ச்­சிக்கு கார­ண­மாகும்.
கடந்த ஆண்டு, நவம்­பரில், கச்சா எண்ணெய் ஏற்­று­மதி நாடுகள் அடங்­கிய, ஒபெக் கூட்­ட­மைப்பு, எண்ணெய் உற்­பத்­தியை நாளொன்­றுக்கு 1.8 மில்­லியன் பேரல்­க­ளாக குறைத்து, விலையை ஏற்ற தீர்­மா­னித்­தது. ஆனால், கூட்­ட­மைப்பில் உள்ள 11 நாடு­களில், 8 நாடுகள் அதை சரி வர அமல்­ப­டுத்­த­வில்லை என்­ப­தாலும், ஈரான் மற்றும் ஈராக் நாடுகள் தங்­க­ளது தின­சரி இலக்­கை­விட அதி­க­மாக உற்­பத்தி செய்­த­தாலும், சந்­தையில் வரவு அதி­க­ரித்­தது. இது சவுதி அரே­பி­யாவை மன­மு­டையச் செய்­தது.அடுத்து, ஒபெக் மற்றும் ஒபெக் அல்­லாத நாடுகள் கூட்­ட­மைப்பின் கூட்டம் வரும் மே, 23ல் நடை­பெற உள்­ளது. இதில், நிறை­வேற்ற வேண்­டிய தீர்­மா­னங்கள் குறித்து, குவைத், அல்­ஜீ­ரியா, வெனி­சுலா, ரஷ்யா, ஓமன் ஆகிய ஐந்து நாடுகள் கலந்து ஆலோ­சித்­து உள்­ளன.
அமெ­ரிக்க அரசு, புதிய எண்ணெய் வழி தடங்­க­ளுக்கு அனு­மதி வழங்க இருக்­கி­றது. கனடா வழி­யாக அமெ­ரிக்­கா­விற்கு எண்ணெய் கொண்டு வரும் திட்­டத்­துக்கு ஒப்­புதல் அளித்து உள்­ளது. மேலும், எண்ணெய் ஆழ்­கு­ழாய்­களை அதி­க­ரித்­துள்­ளது. தற்­போது, 631 குழாய்கள் இயங்­கு­கின்­றன. இவ்­வா­றாக சந்­தையில் ஏற்­பட்­டுள்ள வரவு அதி­க­ரிப்­பி­னாலும், அமெ­ரிக்­காவின் ஐ.இ.ஏ., மற்றும் இ.ஐ.ஏ., அமைப்­புகள் வாரம் இரு­முறை வெளி­யிடும் கணக்­கீட்டில் கச்சா எண்ணெய் தேக்கம் அதி­க­ரிப்பின் கார­ண­மா­கவும், இந்த விலை வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது. வரும் நாட்­க­ளிலும் இந்­நிலை நீடிக்­கு­மானால் மேலும் விலை சரிவு ஏற்­படும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (1 பீப்பாய்) ஏப்., 17சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,070 2,950 3,210 3,340என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 47.00 45.50 49.50 54.30

தங்கம், வெள்ளி
கடந்த இரு வாரங்­க­ளாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிது ஏற்றம் காணப்­பட்­டது. அமெ­ரிக்­காவில் டிரம்ப் தலை­மை­யி­லான அரசு கொண்டு வந்த சட்ட நடை­முறை மற்றும் கொள்­கைகள், குறிப்­பாக மருத்­துவ காப்பு திட்டம் அக்­கட்­சியில் உட்­பூ­சலை ஏற்­ப­டுத்­தி­யது. இதன் விளை­வாக, சர்­வ­தேச சந்­தையில் அமெ­ரிக்க டாலர் மதிப்பு குறைந்­தது. இதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை சிறிது உயர்ந்­தது.
மேலும், கடந்த வாரம் அமெ­ரிக்கா தன் வட்டி விகி­தத்தை உயர்த்­தி­யது. அதன்பின், நடை­பெற்ற கூட்­டத்தில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் தாம­த­மாக எடுக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது. இதனால் இவ்­வாண்டின் வட்டி விகித உயர்வு தாம­த­மாக நடக்கும் என அறி­யப்­பட்­டது. இதன் விளை­வா­கவும் தங்கம் விலை உயர்ந்­தது.வேர்ல்டு கோல்டு கவுன்சில் கணக்­கீட்­டின்­படி, 2017ம் ஆண்டு இந்­திய தங்க இறக்­கு­மதி, 680 – 750 டன்­னாக இருக்கும். கடந்த, 2016ம் ஆண்டு இறக்­கு­மதி வெறும் 514 டன்­னாகும்.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (ஜூன் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 28,660 28,420 29,050 29,400காம்எக்ஸ் (டாலர்) 1,238 1,225 1,255 1,264

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (மே 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 41,050 40,680 42,100 42,690காம்எக்ஸ் (டாலர்) 17.50 17.12 17.85 18.10

ஏலக்காய்
ஏலக்காய் உற்­பத்­தியில் இந்­தியா இரண்டாம் இடம் வகிக்­கி­றது. முத­லிடம் மத்­திய அமெ­ரிக்­கா­வி­லுள்ள கவு­த­மாலா ஆகும். இந்­நாடு உற்­பத்தி செய்யும் ஏலக்காய் அளவு உல­க­ளவில் உற்­பத்தி ஆவதில் 60 – 65 சத­வீதம் ஆகும்.இந்­தி­யாவில் உற்­பத்­தி­யாகும் ஏலக்­காயில், 90 சத­வீதம் கேரள மாநி­லத்தில் உற்­பத்தி ஆகி­றது. கடந்த 2016ம் ஆண்டில் உற்­பத்தி, 40 – 45 ஆயிரம் டன்­க­ளாகும்.
ஆனால், இவ்­வாண்டு பருவ மழை ஏமாற்­றத்தை அளித்­தி­ருப்­பதால், உற்­பத்தி மிகவும் குறைந்து, 20 – 22 ஆயிரம் டன்­னாக இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆகஸ்ட் முதல் பிப்­ர­வரி வரை இதன் அறு­வடை கால­மாகும். இது, நான்கு கட்­டங்­க­ளாக நடை­பெறும். வாரத்தில் மூன்று நாட்கள் தமி­ழகம் போடி நாயக்­கனுார் மற்றும் கேரள மாநிலம் புட்­டடி ஆகிய இடங்­க­ளி­லி­ருந்து கணினி மூல­மாக ஏலம் நடத்­தப்­ப­டு­கி­றது. இந்த ஏலத்தை மத்­திய அரசு நிறு­வ­ன­மான, ‘Spices board of india’ நடத்­து­கி­றது.
தேவை குறைவு மற்றும் கடந்த வருட உற்­பத்­தி­யினால் ஏலக்காய் சந்­தையில் வரவு அதிகம் இருப்­ப­தாலும், இதன் விலை கடந்த தினங்­க­ளாக சரிவை சந்­தித்­தது. வரும் நாட்­களில் மந்­த­மான சூழ்­நிலை ஏற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (ஏப்ரல் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ். (ரூபாய்) 1,335 1,300 1,415 1,455

செம்பு
செம்பு உற்­பத்­தியில் தென் அமெ­ரிக்க நாடுகள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. கடந்த மாதத்தில் சிலி மற்றும் பெரு நாட்டில் செம்பு உற்­பத்தி சுரங்­கத்தில் தொழி­லாளர் வேலை­நி­றுத்த போராட்­டத்தால், அதன் உற்­பத்தி பெரிதும் பாதிப்­புக்கு உள்­ளா­னது.
குறிப்­பாக எஸ்­கோ­டிடா எனும் சுரங்கம் செம்பு உற்­பத்­தியில் முதன்­மை­யா­னது. அதன் உற்­பத்­தியில் 5 லட்சம் டன் அள­வுக்கு பாதிப்பு ஏற்­பட்­ட­தாக கூறப்­பட்­டது.தென் அமெ­ரிக்க நாடு­களை தொடர்ந்து இந்­தோ­னே­ஷியா, ஆஸ்­தி­ரே­லியா, சீனா ஆகிய நாடு­க­ளிலும் செம்பு உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது.
இந்­தோ­னே­ஷிய நாட்டில் அர­சாங்­கத்­துக்கும் சுரங்க உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் இடையே ஏற்­பட்ட கொள்கை மோதல், ஏற்­று­மதி குறித்த கொள்கை முடிவு கார­ண­மாக ஏற்­பட்ட சர்ச்சை இவற்றால் ஏற்­று­மதி பாதிக்­கப்­பட்­டது. இந்­நாட்டை சேர்ந்த பிரீபோர்ட் சுரங்கம் உலக செம்பு உற்­பத்­தியில் மூன்­றா­வது இடத்தில் இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இருப்­பினும் உயர்ந்து வரும், எல்­.எம்.இ., ஸ்டாக் லெவல் இதன் விலை­யேற்­றத்தை தடுக்கும் வகையில் உள்­ளது.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (ஏப்ரல் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 374 369 386 392

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)