பதிவு செய்த நாள்
27 மார்2017
03:15

சென்னை : பி.என்.பரிபாஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்சின் இந்திய பிரிவான, பி.என்.பி.பரிபாஸ் அசெட் மேனஜ்மென்ட், ‘பேலன்ஸ்டு பண்டு’ என்ற முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி ஆனந்த் ஷா கூறியதாவது:எங்கள் நிறுவனம், முதலீட்டாளர்களின் தேவையின் அடிப்படையில், புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது, ‘பி.என்.பி., பரிபாஸ், பேலன்ஸ்டு பண்டு’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் முதலீட்டை வெளியே எடுக்கும், ‘ஓபன் என்டட் பண்டு’ வகையை சார்ந்தது. இந்த பண்டு மூலம், நீண்ட காலத்தில், ‘ஈக்விட்டி, ஆர்பிட்ரேஜ்’ மற்றும் கடன் சார்ந்த முதலீடுகள் மூலம் செல்வம் பெருக்கப்படும்.
சந்தையின் சூழ்நிலையை கவனித்து, தேவையின் அடிப்படையில், எங்கள் குழு, குறுகிய கால முதிர்வை கொண்ட, அதே நேரத்தில், அதிக வருமானம் தரக்கூடிய, திட்டங்களை இலக்கு வைத்து தேர்வு செய்யும். எங்கள் முதலீட்டு செயல்பாடு, நீண்ட காலத்தில், முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தரும் என்பதை உறுதி செய்வதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|