உள்­நாட்டு விமான சேவை­யில் ஜப்­பானை விஞ்­சி­யது இந்­தியாஉள்­நாட்டு விமான சேவை­யில் ஜப்­பானை விஞ்­சி­யது இந்­தியா ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு ...
பங்கு சந்தையில் பெருகும் முதலீடுகள்; ரூ.20,000 கோடி திரட்ட நிறுவனங்கள் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2017
02:17

புதுடில்லி : இந்­திய நிறு­வ­னங்­கள், வரும் மாதங்­களில், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட உள்ளன.
மத்­திய அர­சின் நட­வ­டிக்­கை­க­ளால், நாட்­டின் பொரு­ளா­தா­ரம், நிலை­யான வளர்ச்­சியை கண்டு வரு­கிறது; பண­வீக்­க­மும் கட்­டுக்­குள் உள்­ளது. பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்தி, நிதிச் சந்தை முத­லீ­டு­க­ளுக்கு, பாது­காப்­பான சூழலை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இது போன்ற கார­ணங்­க­ளால், பங்­குச் சந்­தை­களில் முத­லீ­டு­கள் பெருகி வரு­கின்றன. இத்­த­கைய சூழலை பயன்­ப­டுத்தி, விரி­வாக்­கத் திட்­டங்­கள், நடை­முறை மூல­தன தேவை போன்­ற­வற்­றுக்­கான நிதியை திரட்ட, பல நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொள்ள திட்­ட­மிட்டு உள்ளன.
இந்த வகை­யில், தேசிய பங்­குச் சந்­தை­யான, என்.எஸ்.இ., – ஹட்கோ, சி.டி.எஸ்.எல்., – நக் ஷத்­திரா வேர்ல்டு, கொச்­சின் ஷிப்­யார்டு உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், வரும் மாதங்­களில், புதிய பங்­கு­களை வெளி­யிட உள்ளன. இவற்­றுள், ஹட்கோ, சி.டி.எஸ்.எல்., – எஸ்.சந்த் அண்டு கம்­பெனி, ஜென­சிஸ் கலர்ஸ், செக்­யூ­ரிட்டி அண்டு இன்­டெ­லி­ஜன்ஸ் சர்­வீ­சஸ் ஆகிய ஐந்து நிறு­வ­னங்­களின், பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, செபி அனு­மதி அளித்­துள்­ளது.
இத்­து­டன், ஜி.டி.பி.எல்., – ஹாத்வே, என்.எஸ்.இ., – பாரத் ரோடு நெட்­வொர்க், தேஜாஸ் நெட்­வொர்க்ஸ், இரிஸ் லைப்­ச­யன்­சஸ், சல­சர் டெக்னோ இன்­ஜி­னி­ய­ரிங், ஏ.யு., பைனான்­சி­யர்ஸ், பிர­தாப் ஸ்நாக்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜெக்ட்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களும், பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட உள்ளன.விரை­வில், இந்­நி­று­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டிற்கு செபி அனு­மதி அளிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இதை­ய­டுத்து, வரும் மாதங்­களில், புதிய பங்கு வெளி­யீ­டு­களின் மூலம், நிறு­வ­னங்­கள், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை திரட்­டும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.இதில், என்.எஸ்.இ., நிறு­வ­னம் மட்­டும், 10 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட வாய்ப்­புள்­ள­தாக, சந்­தை­யா­ளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

அதிக வர­வேற்புஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பின், 2016ல், புதிய பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் அதிக வர­வேற்பு காணப்­பட்­டது; 26 நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 26ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்­டி­யுள்ளன. இந்­தாண்டு, இது­வரை, பி.எஸ்.இ., – அவென்யூ சூப்­பர்­மார்ட்ஸ் உள்­ளிட்ட, ஐந்து நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்டை மேற்­கொண்­டுள்ளன.
கவர்ச்­சி­க­ர­மான விலை­யில், புதிய பங்­கு­களை வெளி­யிட்­டால், முத­லீட்­டா­ளர்­களின் ஆத­ரவு கிட்­டும். அப்­பங்­கு­கள் விலை, பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­படும் போது, உயர வாய்ப்­புள்­ளது என்ற அடிப்­ப­டை­யில், முத­லீ­டு­கள் குவி­யும்.பங்கு விலையை அதி­க­மாக நிர்­ண­யித்­தால், பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டும் போது, அப்­பங்­கு­கள் விலை, அதி­கம் உய­ராது என்ற அனு­மா­னத்­தில், அவற்­றில் முத­லீடு செய்ய, முத­லீட்­டா­ளர்­கள் தயங்­கு­வர்.-ஐ.வி.சுப்­ர­ம­ணி­யம், இயக்­கு­னர், குவாண்­டம் ஏ.எம்.சி.,

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)