பதிவு செய்த நாள்
31 மார்2017
16:11

புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. இதன் பின் ஜியோ பயன்படுத்துவோருக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை முதல் ஜியோ கட்டண சேவைகள் துவங்கவுள்ள நிலையில் பல்வேறு புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஜியோ இலவசங்கள் மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும், இதற்கான அறிவிப்பு இன்றே வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. தற்சமயம் வரை 5 கோடி பேர் ஜியோ சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த கட்டணம் செலுத்தியுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜியோ சேவைகளை (பிரைம் திட்டம்) தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் புதிய சலுகைகளை அறிவிக்கலாம் என டெலிகாம் வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்களில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே 5 கோடி பேர் ஜியோ சலுகைகளுக்கான கட்டணம் செலுத்தி விட்ட நிலையில் மீதமுள்ள 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள புதிய சலுகை திட்டங்களை ஜியோ அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கென ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜியோ பயனர்களின் பயன்பாட்டை டிராக் செய்து அதற்கேற்ப புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாக ஜியோவின் புதிய சலுகைகள் மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
முதலில் ஜியோ பிரைம் திட்டத்துடன் எத்தனை பேர் கூடுதல் சலுகைகளுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர், பின் எத்தனை பேர் ஜியோவை தவிர்த்து மற்ற சேவைகளை பயன்படுத்த இருக்கின்றனர் என்றும் மூன்றாவதாக எத்தனை பேர் ஜியோ சிம் கார்டினை துண்டிக்கின்றனர் போன்றவை டிராக் செய்யப்படும். பின் இவற்றை கொண்டு வாடிக்கையாளர்களின் நடவடிக்கைக்கு ஏற்ப புதிய சலுகைகளை ஜியோ அறிவிக்கும் என கூறப்படுகின்றது. ஏப்ரல் 1-ந்தேதி ஜியோவின் கட்டண சேவைகள் துவங்கிய சில நாட்களுக்குள் புதிய சலுகைகளை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஜியோ வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|