பதிவு செய்த நாள்
01 ஏப்2017
03:40

மும்பை : ‘நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதியின் மதிப்பு, 22 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக அதிகரிக்கும்’ என, மதிப்பிடப்பட்டு உள்ளதாக, ‘இக்ரா’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து, உலகின் பல நாடுகளுக்கு, பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில், பாசுமதி ஏற்றுமதி, 40 லட்சம் டன்னாக இருந்தது. இது, வரும் நிதியாண்டில், மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், பாசுமதி ஏற்றுமதியின் மதிப்பு, 29 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. பின், சர்வதேச அளவில் விலை குறைவால், பாசுமதி ஏற்றுமதி குறைந்தது. தற்போது, தேவை அதிகரிப்பு, நல்ல விலை போன்ற காரணங்களால், அதன் ஏற்றுமதி வரும் ஆண்டில், அளவின் அடிப்படையில், கடந்த நிதியாண்டை போலவே, 40 லட்சம் டன்னுக்கு குறையாமல் அல்லது அதிகமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு, 22 ஆயிரம் கோடி ரூபாய் – 22 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|