பதிவு செய்த நாள்
01 ஏப்2017
03:41

புதுடில்லி : உள்நாட்டில், கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், மாருதி சுசூகி இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், நாடு முழுவதும், நெக்ஸா என்ற பெயரில், பிரீமியம் கார்களுக்காக, தனிப்பட்ட ஷோரூம்களையும் நடத்தி வருகிறது.
அதில், பலேனோ, பலேனோ ஆர்.எஸ்., எஸ் – கிராஸ், இக்னிஸ் ஆகிய பிரீமியம் மாடல் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், நெக்ஸா ஷோரூமில், இம்மாதம் முதல், சியாஸ் மாடல் கார்களின் விற்பனையையும் துவக்கிஉள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஆர்.எஸ்.கல்சி கூறியதாவது:நிறுவனம், 2014ல், சியாஸ் மாடல் காரை அறிமுகம் செய்தது. இதுவரை, 1.50 லட்சம் சியாஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. நடப்பு நிதியாண்டில் மட்டும், 64 ஆயிரம் கார்கள் விற்பனையாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நெக்ஸா ஷோரூமின் எண்ணிக்கை, விரைவில், 250 ஆக அதிகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|