பதிவு செய்த நாள்
01 ஏப்2017
03:42

புதுடில்லி : அன்னிய வர்த்தக துறையின் தலைமை இயக்குனர் ஏ.கே.பல்லா கூறியதாவது: பலமுனை வரிகளை நீக்கி, ஒரு முனை வரிக்கு வழி வகுக்கும், ஜி.எஸ்.டி., வரும், ஜூலை முதல் அமலாக உள்ளது.இதன் காரணமாக, ஏற்றுமதி சார்ந்த திட்டங்களில் சில மாற்றங்கள் செய்வது அவசியமாகிறது. அதற்கேற்ப, நம் வெளிநாட்டு வர்த்தக கொள்கையிலும் மாற்றங்கள் செய்யப்படும்.
மத்திய வர்த்தக அமைச்சகம், நடுத்தர கால வெளிநாட்டு வர்த்தக கொள்கையை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.இது தொடர்பாக, வர்த்தக அமைச்சகம், பல்வேறு தொழில் கூட்டமைப்புகளுடன், ஆலோசனை நடத்தி வருகிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மந்த நிலையில் இருந்த நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆறு மாதங்களாக, வளர்ச்சி கண்டுள்ளது. அதனால், கடந்த நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 27 ஆயிரம் கோடி டாலரை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|