பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை:ரூ.46,247 கோடி திரட்டியது மத்திய அரசுபொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை:ரூ.46,247 கோடி திரட்டியது மத்திய அரசு ... புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் ...
2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த முடியவில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2017
04:35

மும்பை:இது­வரை இல்­லாத வகை­யில், கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், தர நிர்­ணய நிறு­வ­னங்­கள், 3,500 நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மதிப்பை குறைத்­துள்ளன.இதே காலத்­தில், 2013 – 14ம் நிதி­யாண்­டிற்கு பின், மிகக் குறைந்த அள­வாக, 1,800 நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மதிப்பு உயர்த்­தப்­பட்டு உள்­ள­தாக, ‘புளும்­பெர்க்’ நிறு­வ­னத்­தின் புள்ளி விப­ரம் தெரி­விக்­கிறது.ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள், வங்­கி­க­ளுக்கு கடனை திரும்­பச் செலுத்த முடி­யா­மல் தவிக்­கின்றன. பல நிறு­வ­னங்­கள், கூடு­தல் கடன் சுமை­யு­டன், அதிக வட்டி செல­வி­னத்­தில் தள்­ளா­டு­கின்றன.
மறு­பு­றம், பல நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து, நிலு­வை­யில் உள்ள கடனை வசூ­லிக்க முடி­யா­மல், வங்­கி­கள் விழி­பி­துங்கி நிற்­கின்றன. ஒட்­டு­மொத்த வங்­கி­களின் வாராக்­க­டன் மற்­றும் மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட கடன் அளவு, 10 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது.இழப்பை கண்டு வரும், 12 நிறு­வ­னங்­களை தேர்வு செய்து, அவற்­றின் கடன் நிலு­வை­யில் ஒரு பகு­தியை, பங்கு முத­லீ­டாக மாற்ற வங்­கி­கள் முயன்றன.இதன் மூலம், நிறு­வ­னங்­கள் புத்­து­யிர் பெறும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், இந்த முயற்­சி­யும் தோல்­வி­ய­டைந்­தது.
வங்­கி­கள், நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வும் நோக்­கில், அவற்­றின் கடன் தவணை காலத்தை நீட்­டித்­தும், குறிப்­பிட்ட காலத்­திற்கு வட்டி செலுத்­து­வ­தில் இருந்து விலக்­கும் அளிக்­கின்றன.நிறு­வ­னங்­க­ளி­டம் நிதிப் புழக்­கம் பெருகி, அவை வர்த்­த­கத்­தில் வளர்ச்சி காணும் என்ற நோக்­கில், இத்­த­கைய சலு­கை­கள் அளிக்­கப்­ப­டு­கின்றன. எனி­னும், துவண்­டு­விட்ட பல நிறு­வ­னங்­களை, துாக்கி நிறுத்த முடி­ய­வில்லை.
அத­னால், பல நிறு­வ­னங்­கள் புதிய கடன்­களை பெறு­வ­தற்­கான தகு­தியை இழக்க நேர்ந்­துள்­ளது. பல நிறு­வ­னங்­களின், கடன் தகுதி மதிப்­பீட்டை, ஸ்தி­ர­மான நிலை­யில் இருந்து, பாதிக்க வாய்ப்­புள்ள பிரி­விற்கு, தர நிர்­ணய நிறு­வ­னங்­கள் குறைத்­துள்ளன.இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், லோதா டெவ­லப்­பர்ஸ், ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ், டாடா ஸ்டீல் நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மதிப்­பீட்டை, தர நிர்­ணய நிறு­வ­னங்­கள் குறைத்­துள்ளன.
மூடிஸ் நிறு­வ­னம், ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னத்­தின் கடன் தகுதி மதிப்­பீட்டை, அதிக அபா­யம் உள்ள முத­லீட்டு பிரி­வில் இருந்து, பாதிக்க வாய்ப்­புள்ள பிரி­விற்கு மாற்­றி­யுள்­ளது.கடந்த பிப்­ர­வ­ரி­யில், ஐ.எப்.சி.ஐ., – ஐ.டி.பி.ஐ., வங்கி ஆகி­ய­வற்­றின் கடன் தகுதி மதிப்­பீடு குறைக்­கப்­பட்டு உள்­ளது. டாடா டெலி­சர்­வீ­சஸ், ஜன­லக் ஷ்மி ஆகிய நிறு­வ­னங்­களின் கடன் தகு­தியை, தர நிர்­ணய நிறு­வ­னங்­கள், கடந்த மார்ச்­சில் குறைத்­துள்ளன.அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­கள் சூடு­பி­டிக்­கும் பட்­சத்­தில், பல்­வேறு தொழில்­கள் மந்த நிலை­யில் இருந்து மீண்டு, வளர்ச்­சிப் பாதை­யில் பய­ணிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
ஏற்­றம் – இறக்­கம்கடந்த நிதி­யாண்­டில், கடன் தகுதி உயர்த்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்­கும், கடன் தகுதி குறைக்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்­கும் இடை­யி­லான விகி­தாச்­சா­ரம், 1:94 ஆக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டில், 1:52 ஆக இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)