2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த முடியவில்லை 2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த ... ... புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முத­லீடு செய்யும் முன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
00:50

நீங்கள் செய்யும் முத­லீடு, மிகச்­சி­றந்த பலனை அளிக்க வேண்டும் என்றால், அவை உங்­க­ளுக்கு ஏற்­ற­தாக இருக்க வேண்டும். இதை உறுதி செய்து கொள்ள முத­லீடு செய்யத் துவங்கும் முன், உங்­களை பற்­றியும், உங்கள் நிலை பற்­றியும், அடிப்­ப­டை­யான சில தக­வல்­களை தெரிந்து கொண்டு செயல்­பட வேண்டும். இதற்கு, உங்­களை நீங்­களே கேட்டுக் கொள்ள வேண்­டிய சில கேள்­விகள்:
இலக்கு என்ன?* உங்கள் தனிப்­பட்ட இலக்­குகள் மற்றும் கன­வுகள் என்ன என, கேட்டுக் கொள்­ளுங்கள் * இலக்­கு­களும், கன­வு­க­ளுமே எந்த வகை­யான முத­லீ­டு­களை தேர்வு செய்ய வேண்டும் என, தீர்­மா­னிக்­கின்­றன. உதா­ர­ணத்­திற்கு, 20 ஆண்­டு­க­ளுக்கு பின், உங்கள் குடும்­பத்­திற்கு நிலை­யான வரு­மானம் வர வேண்டும் என நினைத்தால், அதற்­கேற்ற நீண்ட கால முத­லீட்டை நாட வேண்டும்* இந்த கேள்­விக்­கான பதில்கள் மூலம், உங்­க­ளுக்­கான முத­லீட்டு சாத­னங்கள் மற்றும் அதற்கு எவ்­வ­ளவு சேமிக்க வேண்டும் என, தீர்­மா­னிக்­கலாம்.
எத்­தனை பேர்?* உங்­களை சார்ந்­தி­ருப்­பது எத்­தனை பேர்?* சேமிப்பும், முத­லீடும் எதிர்­கால நல­னுக்­கா­னது தானே! எனவே, முத­லீட்டின் அளவை தீர்­மா­னிப்­பதில், குடும்பம் முக்­கிய பங்கு வகிக்­கி­றது. அதா­வது, உங்­களை எத்­தனை பேர் சார்ந்­தி­ருக்­கின்­றனர் என்­ப­தற்கு ஏற்ப, முத­லீடு அமைய வேண்டும்* படிக்கும் வயதில் பிள்­ளைகள் இருந்தால், உங்­க­ளுக்கு டெர்ம் இன்­சூரன்ஸ் பாது­காப்பு அவ­சியம். வய­தான பெற்றோர் இருந்தால், மருத்­துவ காப்­பீடு அவ­சியம்.
வரு­மானம் என்ன?* நீங்கள் எவ்­வ­ளவு சம்­பா­திக்­கி­றீர்கள் என்­பதும், அதில் எவ்­வ­ளவு தொகை அத்­தி­யா­வ­சிய தேவைக்­காக செல்­கி­றது என்­பதும் முக்­கி­ய­மா­னது* வரு­மானம் தான் உங்கள் செல­வு­களையும், சேமிப்­பையும் தீர்­மா­னிக்­கி­றது. வரு­மா­னத்­திற்கும், செல­வு­க­ளுக்­கு­மான இடை­வெளி அதிகம் இருந்தால், உங்­களால் அதிகம் சேமிக்க முடியும்* உங்­களால் எவ்­வ­ளவு சேமிக்க முடியும் என தெரிந்­த­வுடன், அதை செயல்­ப­டுத்த வேண்டும். போது­மா­ன­தாக இல்­லை­யெனில், சேமிப்பை அதி­க­ரிக்கும் வழி­களை தேட வேண்டும்.
சீரான வரு­மா­னமா?* உங்கள் வரு­மானம் சீரா­னதா அல்­லது ஏற்ற, இறக்கம் கொண்­டதா என்­பதும் முக்­கி­ய­மா­னது* சீரான வரு­மானம் அதா­வது, மாதச்­சம்­பளம் பெறு­பவர் எனில், திட்­ட­மிட்­ட­படி குறிப்­பிட்ட தொகையை சேமித்து முத­லீடு செய்­யலாம். ‘ப்ரீ­லான்சர்’ போன்­றவர் எனில், வரு­மா­னத்தில் ஏற்ற, இறக்கம் நில­வலாம் * ப்ரீலான்சர் அல்­லது சுய தொழில் செய்­பவர் எனில், முதலில் அவ­சரத் தேவைக்­கான நிதியை உரு­வாக்­கு­வதில் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)