2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த முடியவில்லை 2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த ... ... புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு தயா­ராகும் காப்­பீட்டு துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
00:50

இந்த ஆண்டு, காப்­பீட்டுத் துறையில் குறைந்­தது, மூன்று நிறு­வ­னங்கள் பங்கு வெளி­யீட்டில், ஈடு­பட இருப்­பது பங்கு முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் ஆர்­வத்­தையும், எதிர்­பார்ப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
புதிய பங்கு வெளி­யீ­டுகள் அண்மை கால­மாக கவ­னத்தை ஈர்த்­தி­ருக்­கின்­றன. இந்த வரி­சையில், இந்த ஆண்டு பங்கு முத­லீட்­டா­ளர்கள், காப்­பீட்டுத் துறை பங்கு வெளி­யீட்டை எதிர்­பார்க்கும் நிலை உரு­வாகி உள்­ளது. காப்­பீட்டு நிறு­வ­னங்கள் சில பங்கு வெளி­யீட்­டிற்கு ஆயத்­த­மாகி வரு­கின்­றன. குறைந்­தது, மூன்று நிறு­வ­னங்கள் பங்கு வெளி­யீட்டில் ஈடு­படும் வாய்ப்பு இருப்­பது பங்கு முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.காப்­பீட்டுத் துறையில் கடந்த, 2016ம் ஆண்டு, தனியார் காப்­பீடு நிறு­வ­ன­மான ஐ.சி.ஐ.சி.ஐ., புரு­டென்­ஷியல் லைப் இன்­சூரன்ஸ் நிறு­வனம் பங்­கு­களை வெளி­யிட்­டது.
பட்ஜெட் அறிவிப்புஇந்த ஆண்­டுக்­கான பொது பட்­ஜெட்டை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொதுத் துறை காப்­பீட்டு நிறு­வ­னங்கள் பங்­கு­களை வெளி­யிடும் வாய்ப்பு பற்றி தமது உரையில் குறிப்­பிட்டார். அதன்­படி தற்­போது இந்த நிறு­வ­னங்­களில் சில பங்கு வெளி­யீட்­டிற்கு தயா­ராகி வரு­கின்­றன. இதற்கு முன், பொதுத் துறை வங்­கி­களின் பங்கு வெளி­யீடு கவ­னத்தை ஈர்த்­தன. இந்­திய காப்­பீட்டுத் துறையும் வங்கித் துறை போலவே பழ­மை­யா­னது என்­றாலும், அண்மை கால­மாக தான், சீர்த்­தி­ருத்­தங்­களை கண்டு வரு­கின்­றன. கடந்த, 10 ஆண்­டு­களில் விரி­வாக்கம் மற்றும் தக­வல்­களை வெளி­யி­டு­வது ஆகி­ய­வற்றில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது.
காப்­பீட்டுத் துறைக்­கான கட்­டுப்­பாட்டு அமைப்­பான, இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., 2000ல் ஏற்­ப­டுத்­தப்­பட்டு, காப்­பீட்டுத் துறையில் தனியார் நிறு­வ­னங்கள் அனு­ம­திக்­கப்­பட்­டன. தற்­போது காப்­பீட்டுத் துறை நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யீட்­டிற்கு ஆயத்­த­மா­வது, வெளிப்­ப­டை­யான முறையில் தக­வல்­களை பகிர்­வதில் மேலும் முன்­னேற்­றத்தைக் கொண்டு வரும் என, இத்­துறை வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். நிறு­வ­னங்கள் முத­லீட்­டா­ளர்­களுக்கு பதில் சொல்ல கட­மை­பட்ட­வை­யாக மாறும் என்­கின்­றனர்.
10 ஆண்­டு­க­ளுக்கு முன் வரை, பாலிசி விப­ரங்கள், கிளைம் விப­ரங்கள், சரண்டர் விகிதம் போன்­ற­வற்றில் வெளிப்­படைத் தன்மை அதிகம் இருக்­க­வில்லை. எனினும், காப்­பீட்டுத் துறை வெளிப்­ப­டை­யாக்­கப்­பட்ட பின் தக­வல்­களை பகிர்­வது அதி­க­ரித்­து­இருப்­ப­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். பங்­குச்­சந்­தையில் நுழைந்து, நிதி திரட்டும் திட்டம், இவற்றை மேலும் அதி­க­மாக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
தகவல்கள் பகிர்வுஏனெனில், பங்கு வெளி­யீட்­டிற்கு வரும் எந்த நிறு­வ­னமும் முன்­கூட்டியே தயா­ராக வேண்டும். அவை மேலும் சிறந்த முறையில் தக­வல்­களை வெளிப்­ப­டை­யாக பகிர்ந்து கொள்ள வேண்டும். கடந்த, 2014ல், பங்கு வெளி­யீட்­டிற்­கான வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­படும் வரை பல நிறு­வ­னங்கள் தக­வல்­களை பகிர்ந்து கொள்­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை என, வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர். இப்­போது பொதுத்­துறை காப்­பீட்டு நிறு­வ­னங்கள், சில பங்கு வெளி­யீட்­டிற்கு ஆயத்­த­மாகி வரு­கின்­றன. இது பங்கு முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­தி­இ­ருந்­தாலும், வெற்­றி­க­ர­மான பட்­டி­ய­லி­டுதல் எளி­தாக இருக்­காது என்ற கருத்தும் உள்ளது.
ஆய்வு செய்யும் முறைகாப்­பீட்டு நிறு­வ­னங்கள் குறிப்­பாக ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­னங்கள் நிதி தொடர்­பான தக­வல்­களை வெளி­யி­டு­வதில் தங்­க­ளுக்கே உரிய வழி­களை கையாள்­கின்­றன. இது வங்­கிகள் மற்றும் நிதி சேவை நிறு­வ­னங்கள் பின்­பற்றும் முறையில் இருந்து மாறு­பட்­டது. வருவாய் மற்றும் செல­வு­களில் பல அடுக்­கு­களை கொண்­டது.முத­லீட்­டா­ளர்­களைப் பொறுத்­த­வரை, ஆயுள் காப்­பீட்டு நிறு­வன வர்த்­த­கத்தை விட, பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் வர்த்­தகம் எளி­தாக புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும் என, கரு­தப்­ப­டு­கி­றது. இந்த பிரிவில், லாபம் – நஷ்டம் தொடர்­பான தக­வல்கள் உட­ன­டி­யாக கிடைக்க கூடி­யவை என்­பதால், பங்­கு­களின் மதிப்பை கண்­ட­றி­வது சாத்­தியம். இந்த நிறு­வ­னங்கள் பட்­டி­ய­லி­டப்­படும் போது, அவற்றின் செயல்­பாடு தொடர்­பான தர­வு­களை அலசி ஆராய்­வது சாத்­தியம்.
பொதுத்­துறை காப்­பீட்டு நிறு­வ­னங்­களில் ஜெனரல் இன்­சூரன்ஸ் கார்ப்­ப­ரேஷன் மற்றும் நியூ இந்­தியா அஷ்­யூரன்ஸ் இந்த ஆண்டு பங்கு வெளி­யீட்டில் ஈடு­பட வாய்ப்­பி­ருக்­கி­றது. எஸ்.பி.ஐ., லைப் இன்­சூரன்ஸ் நிறு­வ­னமும் பங்கு வெளி­யிட வாய்ப்­புள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. எனவே, இந்த ஆண்டு காப்­பீட்டுத் துறைக்­கான திருப்பு முனை­யாக அமை­யலாம் என, கரு­தப்­ப­டு­கி­றது. பங்­குச்­சந்­தையில் பொது­வாக காணப்­படும் தன்­மையும், இவற்­றுக்கு சாத­க­மாக அமை­யலாம் என, கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)