2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த முடியவில்லை 2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த ... ... புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமா­டிட்டி சந்தை: முருகேஷ் குமார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
00:52

கச்சா எண்ணெய்
கடந்த வாரம், எண்ணெய் விலை, 7.24 சத­வீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய், 50 டாலரை கடந்து வர்த்­த­கம்­ஆ­னது. இது, அதற்கு முந்­தைய இரு வாரங்­களின் வியா­பா­ரத்தை விட, அதி­க­பட்ச விலை­யாகும். கடந்த மூன்று வாரங்­க­ளாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், 47 டாலர் என்ற அள­விற்கு குறை­யாமல் வர்த்­த­க­மா­னது குறிப்­பி­டத்­தக்­கது.கடந்த மார்ச், 23ல், குவைத்தில் நடை­பெற்ற, ஒபெக் மற்றும் நான் ஒபெக் அமைப்­பு­களின் கூட்­டத்தில், உற்­பத்தி அள­வினை குறைத்து, விலை­யேற்­றத்தை அதி­க­ரிக்கும் செய­லுக்கு, அனைத்து நாடு­களும் உறுதி அளித்­தன.ஒபெக்கில், 11 நாடு­களும், நான் ஒபெக்கில், மிகப்­பெ­ரிய நாடான ரஷ்­யாவும், உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது, கடந்த, 15 ஆண்­டு­களில் இல்­லாத ஒரு செய­லாகும். தற்­போது, மொத்த உற்­பத்தி, 1.8 மில்­லியன் குறை­வாக உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது. அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்ட மாற்­றங்­களால், கடந்த வாரம் வெளி­வந்த, இ.ஐ.ஏ., கச்சா எண்ணெய் இருப்பு விபரம் எதிர்­பார்த்த அளவை விட, குறை­வாக உயர்ந்­தது. அதா­வது, 1.4 மில்­லியன் பீப்பாய் உயரும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், 8,67,000 பீப்­பாய்­களே உயர்ந்து, மொத்த இருப்பு, 533.98 மில்­லியின் பேரல்­க­ளாக ஆனது. வரும் நாட்­களில், கச்சா எண்ணெய் விலைக்கு, 51.50 டாலர் என்ற அளவில் ரெசிஸ்டென்ட் உள்­ளது. அதை கடந்து வர்த்­த­க­மானால், இது மீண்டும் உய­ரக்­கூடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும், சப்போர்ட் விலை­யாக, 49.50 டாலர் இருக்கும். இந்த வார இறு­தியில், வெள்­ளிக்­கி­ழமை வெளி­வர உள்ள அமெ­ரிக்க வேலை­வாய்ப்பு நில­வ­ரத்தை பொறுத்து, கச்சா எண்ணெய் விலையில் மாற்­றங்கள் உரு­வாகும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (1 பீப்பாய்)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,190 3,120 3,375 3,480என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 49.50 48.30 51.50 52.70


தங்கம், வெள்ளி
இரு வாரங்­க­ளாக, விலை ஏற்றம் காணப்­பட்ட தங்கம் விலை, கடந்த வாரம் சரிவைச் சந்­தித்­தது. ஆனால், வெள்ளி விலை உயர்ந்து காணப்­பட்­டது. கடந்த காலாண்டில், (ஜன., – மார்ச் வரை), தங்கம் விலை, 8.5 சத­வீதம் உயர்ந்து, சர்­வ­தேச சந்­தையில் ஓர் அவுன்ஸ், 1,247 டால­ராக வர்த்­த­க­மா­னது. இது, 2016 – 2017ம் நிதி­யாண்டின் நல்ல ஓர் உயர்­வாகும்.புதி­தாக பொறுப்பு ஏற்ற, அமெ­ரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வரி, முத­லீடு மற்றும் காப்­பீட்டு திட்­டங்கள் குறித்த கொள்­கை­களால், அசா­தா­ரண சூழ்­நிலை ஏற்­பட்­டதால், முத­லீட்­டா­ளர்கள் தங்­கத்தின் மீது ஆர்வம் காட்­டினர். மேலும், நடை­பெற உள்ள ஐரோப்­பிய தேர்­தல்கள் மற்றும் பிரிட்டன் வெளி­யேற்ற விவ­காரம் ஆகி­யவை, இவ்­வி­லை­யேற்றம் உண்­டா­ன­தற்கு துணை நின்­றன. பிப்., மாதத்தை காட்­டிலும், மார்ச் மாதம், தங்கம், வெள்ளி அளவில் உயர்ந்­தி­ருந்­தது.இருப்­பினும், அமெ­ரிக்க டாலர் இன்டெக்ஸ் (டி.எக்ஸ்.ஒய்.,) கடந்த நான்கு மாதத்தில் குறை­வான அளவில் இருந்து மீண்டு, 81.99 என்ற நிலையில் வர்த்­தக­மா­கி­றது. இதற்கு, அண்­மையில் வெளி­வந்த அமெ­ரிக்க பொரு­ளா­தார கார­ணிகள் சாத­க­மாக அமைந்­தது கார­ண­மாகும். மேலும், பொது­வாக, டாலர் இன்டெக்ஸ் மற்றும் தங்கம், வெள்ளி விலைகள் எதிர்­மறை பாதையில் நீங்கும். வரும் நாட்­களில், தங்கம் விலையில் சர்­வ­தேச சந்­தையில், 1,265 டாலர் ரெசிஸ்டென்ஸ் ஆகும். இதை கடக்க இய­ல­வில்லை எனில், சிறிது விலை சரிவு நிகழும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வெள்­ளியை பொறுத்­த­வரை, 18 டாலர் ரெசிஸ்டென்ஸ் ஆகும். இதை கடந்து செல்லும் நிலையில், மீண்டும் வெள்ளி விலை உயரும்.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (ஏப்., 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 28,290 28,150 28,600 28,785காம்எக்ஸ் (டாலர்) 1,238 1,225 1,265 1,280

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (மே 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 41,950 41,480 42,800 43,500காம்எக்ஸ் (டாலர்) 18 17.30 18.50 19.30

செம்பு
தொழிற்­சாலை மூலப்­பொ­ரு­ளான, செம்பு, அதன் உற்­பத்தி மற்றும் தேவை­களை பொறுத்து விலை நிர்­ணயம் ஆகி­றது. சர்­வ­தேச அளவில், சுரங்க உற்­பத்­தியில் ஏற்­படும் சிக்­கல்கள், தொழி­லாளர் வேலை­நி­றுத்தம், அரசின் ஏற்­று­மதி கொள்கை என, பல கார­ணங்­களும் விலை நிர்­ண­யத்தில் குறிப்­பி­டத்­தக்க பங்கு வகிக்கும்.கடந்த ஒரு மாத­மாக, சிலி நாட்டின் மிகப்­பெ­ரிய சுரங்­க­மான, எஸ்கோன் சுரங்க தொழி­லாளர் வேலை­நி­றுத்தம், இன்னும் சுமு­க­மான சூழ்­நி­லைக்கு வர­வில்லை. இது, செம்பு உற்­பத்­தியை பாதிக்­கி­றது. இதனால், கடந்த வாரம், செம்பின் விலையில் உயர்வு ஏற்­பட்­டது. சர்­வ­தேச சந்­தையில் (எல்.எம்.இ.,) ஒரு டன், 620 டாலர் என்ற அள­வுக்கு விலை ஒன்­பது மாத உச்­சத்தை அடைந்­தது.மேலும், சீனாவின் சந்­தையில், இதன் தேவை கூடும் என்ற எதிர்­பார்ப்பும் விலை ஏற்­றத்­திற்கு கார­ண­மாகும்.உல­க­ள­வி­லான சுரங்க உற்­பத்தி நிறு­வன பிர­தி­நி­திகள், இன்று, சிலி நாட்டின் சாண்­டிகோ நகரில் ஒன்­று­கூடி, சுரங்க பிரச்­னைகள் குறித்து கலந்து ஆலோ­சிக்க உள்­ளனர்.பெரு நாட்டின் மிகப்­பெ­ரிய, பிரிபோர்ட் மெக்­மொரான் நிறு­வ­னத்தின், செரோ வெர்டே சுரங்கம், கடந்த வெள்­ளி­யன்று, தன் இயல்பு நிலைக்குத் திரும்­பி­யது. இதன் மூலம், தொழி­லா­ளர்கள் வேலை­நி­றுத்தம் முடிவு பெற்­றது. வரும் நாட்­களில், இதன் உற்­பத்தி அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள் (ஏப்ரல் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 378 372.5 387 395

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)