2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த முடியவில்லை 2016 – 17ம் நிதியாண்டில்...துவண்டுவிட்ட பல நிறுவனங்களை துாக்கி நிறுத்த ... ... புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் புதிய நிதி­யாண்டு; புதிய விலைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
குறி­யீ­டுகள் சொல்லும் கதை என்ன?: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
00:53

இன்­னொரு நிதி ஆண்டு நிறைவு பெற்­றுள்­ளது... முடிந்த ஆண்டின் கதையை, புள்ளி விப­ரங்கள் வழி­யாக பார்த்தால் எப்­படி இருக்கும்?
முடிந்த ஆண்டு குறித்து, நாம் கொண்­டுள்ள மதிப்­பீ­டுகள் சரியா? முத­லீட்­டா­ளர்­களின் நினை­வாற்றல், உண்­மையில் மிகக் குறு­கிய அளவு கொண்­டது என்­பதே உண்மை. ஓராண்­டிற்குள், அந்த ஆண்டின் நிகழ்­வு­களை மறக்கக் கூடிய மனப்­போக்கு கொண்­ட­வர்­க­ளா­கவே, பெரு­வா­ரி­யான முத­லீட்­டா­ளர்கள் இருக்­கின்­றனர். ஆகவே, ஓராண்டை பற்றி நாம் கொண்­டுள்ள மனப்­ப­தி­வுகள், பல நேரங்­களில் உண்­மைக்கு சற்று புறம்­பா­கவே கூட அமைந்து விடு­கின்­றன. இதோ, புள்ளி விப­ரங்கள் சொல்லும் கதையை பார்ப்போம்... கூடவே, எண்கள் பொய் சொல்­வ­தில்லை என்­ப­தையும், நினைவில் கொள்வோம்!
* கடந்த ஆண்டு, பங்குச் சந்­தையின் குறி­யீ­டான, ‘நிப்டி’ 18.94 சத­வீதம் அதி­க­ரித்­தது.* கச்சா எண்­ணெயின் விலை, 35.31 சத­வீதம் அதி­க­ரித்­தது.* டால­ருக்கு எதி­ரான ரூபாயின் மதிப்பு, 66.36ல் துவங்கி, 64.9 ஆக அதி­க­ரித்து முடிந்­தது.* உலக முத­லீட்­டா­ளர்கள் (எப்.ஐ.ஐ.,) 25,590 கோடி ரூபாய்க்கு, இந்­திய பங்­கு­களை வாங்­கினர்.* உள்­நாட்டு பரஸ்­பர நிதி­களும், 26,730 கோடி ரூபாய்க்கு, நம் பங்­கு­களை வாங்­கின.* இரு­த­ரப்பும், இந்­திய சந்­தையில், 52,320 கோடி ரூபாய்க்கு முத­லீடு செய்­ததே, சந்­தையின் உயர்­வுக்கு வழி­வ­குத்­தது என, சொல்­லலாம்.* இந்­தி­யாவின் அன்­னிய செலா­வணி கையி­ருப்பு, 359.7 பில்­லியன் டாலரில் இருந்து, 366.7 பில்­லியன் டால­ராக உயர்ந்­தது.* தங்­கத்தின் வர்த்­தகம், 2,800 ரூபாயில் துவங்கி, 2,941 ரூபாயில் முடிந்­தது. விலை உயர்வு வெறும், 5.04 சத­வீதம் மட்­டுமே.* மாதந்­தோறும், இந்­திய முத­லீட்­டா­ளர்கள், 4,050 கோடி ரூபாயை, முறை­யான முத­லீட்டு திட்டம் (எஸ்.ஐ.பி.,) மூலம் செலுத்­து­கின்­றனர். இது, வர­லாறு காணாத குறி­யீடு.* நிப்­டியின் பி.ஈ., அளவு, அடுத்த ஆண்டின் ரொக்க லாபத்தை விட, 19 மடங்கு உள்­ளது. இது, சமீப வர­லாற்றில் இருந்­த­தில்லை.* மிட்காப், 100 குறி­யீட்டின் மதிப்பு, ரொக்க லாபத்தை விட, 33 மடங்கு அதிகம் உள்­ளது. இது மதிப்­பீட்­ட­ளவில் மிக அதிகம்.
சரி, இந்த குறி­யீ­டுகள் சொல்லும் கதை தான் என்ன?கடந்த ஆண்டு, இந்­திய பங்­கு­களின் மீது, நம் மக்­களின் நம்­பிக்கை அபா­ர­ மாக உயர்ந்து நிற்­கி­றது. இந்த நம்­பிக்கை தொடர்ந்து நிலைக்க, பொரு­ளா­தார வளர்ச்சி கூடி, நிறு­வ­னங்­களின் வரு­வாயும், லாபக் கணக்கும் வெகு­வாக உயர வேண்டும். அடிப்­ப­டையில், ஒட்­டு­மொத்த நிறு­வ­னங்­களின் லாப வளர்ச்­சியே, சந்­தையின் தொடர் ஏற்­றத்­திற்கு அத்­தி­யா­வ­சியம். அதை ஏற்­ப­டுத்த வேண்­டிய முக்­கிய துறைகள், கடந்த ஆண்டு சந்­தித்த தேக்­கமும், மந்­தமும் விரைவில் விலக வேண்டும். சந்­தையில் தொடர்ந்து மந்த நிலை காணும் அரசு வங்­கிகள், மின் உற்­பத்தி துறை சார்ந்த நிறு­வ­னங்கள், கன­ரக தொழில்கள் மற்றும் ஏற்­று­மதி சார்ந்த தொழில்­களில், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும். ஆக, முடிந்த ஆண்டில், பங்குச் சந்­தையின் நகர்வில், முக்­கிய பங்கு வகித்த நிறு­வ­னங்கள், தொடர்ந்து சந்­தையின் எதிர்­பார்ப்பை நிறைவு செய்ய வேண்டும்.
மேலும், புதிய நிறு­வ­னங்கள் பல சந்­தையின் கவ­னத்தை ஈர்க்கும் வண்ணம் அபார வளர்ச்சி காண வேண்டும். ஏமாற்­றங்­களை எளிதில் ஜீர­ணிக்கக் கூடிய நிலையில் சந்தை இல்லை என்­பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், நிறு­வ­னங்கள் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி, சந்­தையால் கொண்­டா­டப்­படும். ஒவ்­வொரு நிதி ஆண்டும், சந்­தையின் போக்கில் ஒரு புதிய நகர்வை ஏற்­ப­டுத்தும். வரும் ஆண்டும், இதற்கு விதி­வி­லக்கு அல்ல.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)