இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும்இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும் ... ஏப்ரலில் விற்பனைக்கு வரும் நோக்கியா மொபைல் போன்கள் ஏப்ரலில் விற்பனைக்கு வரும் நோக்கியா மொபைல் போன்கள் ...
ஜி.எஸ்.டி.,யால் தங்கம் விலை உயரும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
15:52

புதுடில்லி:ஜூலை, 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., வரி நடைமுறை அமலுக்கு வரும் போது, 12 சதவீத வரியின் கீழ் வரும் தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி., வரி கட்டமைப்பு, 5, 12, 18, 28 சதவீதமாக இருக்கும் என கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. தற்போது தங்கத்திற்கு, 10 சதவீத இறக்குமதி வரி; 1 சதவீத வாட் வரி; 1 சதவீத கலால் வரி விதிக்கப்படுகிறது.
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ‛தங்கத்தை, 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்' என, பரிந்துரை செய்துள்ளார்.
12 சதவீதத்தை தாண்ட கூடாது
‛‛ஒரு தொழில் நல்ல முறையில் வளர வேண்டும் என்றால், ஜி.எஸ்.டி., மற்றும் இறக்குமதி வரி சேர்த்து, 12 சதவீதத்திற்கு மேல் இருக்க கூடாது. ஏற்கனவே, 10 சதவீத இறக்குமதி வரி உள்ளது. இத்துடன், 12 சதவீத ஜி.எஸ்.டி., வரியையும் சேர்த்தால், மொத்தம், 22 சதவீத வரியாகி விடும்,'' என, கோட்டாக் மகிந்திரா வங்கியின் உயர் அதிகாரி சேகர் பண்டாரி தெரிவித்துள்ளார்.
இந்திய தங்க நகை கடைகள் சங்க தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில,‛‛ ஏற்கனவே, 10 சதவீத இறக்குமதி வரி உள்ளது. எனவே, தங்கம் மீதான ஜி.எஸ்.டி., வரி 1.25 சதவீதமாக இருக்க வேண்டும். இல்லாவிடில், ஜி.எஸ்.டி., 6 சதவீதம், இறக்குமதி வரி, 6 சதவீதம் என மாற்றி அமைக்க வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார். இதையும் மீறி, தங்கம் மீது, 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டால், தங்கம் விலை உயர்ந்து, அதன் விற்பனை பாதிக்கப்படும் என நகைக்கடைகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)