பதிவு செய்த நாள்
10 ஏப்2017
07:41

சொந்த வீடு என்பது பொருத்தமான பட்ஜெட்டில், விரும்பிய இடத்தில், எதிர்பார்த்த வசதிகளுடன் அமைய வேண்டும். இத்தகைய கனவு வீட்டிற்கான தேடலில் ரியல் எஸ்டேட் இணையதளங்களையும் ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்கான வழிகள்:முதல் கட்டத்தேர்வுநமக்கேற்ற வீட்டை வாங்கும் முன் பொருத்தமாக தோன்றும் வீடுகளை பார்த்து, அவற்றின் அம்சங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆனால், எல்லா வீடுகளையும் நேரில் பார்வையிட முடியாது. இது நேரத்தை வீணாக்குவதோடு, அலைச்சலாகவும் அமையும். மேலும், எல்லா குடியிருப்பு திட்டங்களுமே நமக்கு பொருத்தமாக இருக்கும் என சொல்ல முடியாது. இந்த நிலையில் வீடுகள் பற்றிய தகவல்களை அளிக்கும் ரியல் எஸ்டேட் இணையதளங்கள் பெருமளவு கைகொடுக்கும்.இந்த இணையதளங்கள் குடியிருப்பு திட்டங்கள் பற்றிய தகவல்களை பட்டியலிடுவதோடு கூகுள் வரைப்படத்துடன் பொருத்திப் பார்க்கும் வசதியை அளிக்கின்றன. எனவே, இவற்றின் மூலமே அமைவிடம் எப்படி உள்ளது என, தெரிந்து கொள்ளலாம்.
ஒப்பீடு வசதிமுதல் கட்ட ஆய்வுக்குப்பின் வாங்க பரிசீலிக்கலாம் என நினைக்கும் வீடுகளை, முதல் கட்டமாக பட்டியலிட்டுக் கொள்ளலாம். அதன் பின் இந்த தளங்கள் மூலமே வீடுகளின் விலை, அடிப்படை வசதிகள், கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். மக்கான்.காம் இணையதளம் ஒவ்வொரு பகுதிக்கும் சுற்றுப்புற வாழ்வியல் தன்மை அடிப்படையில், ஒரு குறியீட்டை வழங்குகிறது. நோபுரோக்கர்.காம் தளம் லைப்ஸ்கோர் குறியீட்டை வழங்குகிறது. 99ஏர்க்கர்ஸ்.காம் தளம் முன்னணி வீடுகள் என பட்டியலிடுகிறது.
நேரடி விஜயம்வீடு வாங்குவது தொடர்பாக தீர்மானிப்பதற்கு முன், நேரில் ஒரு முறை பார்வையிடுவது நல்லது. கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கே இது சாத்தியம். வீடுகளுக்கான வரைபடம், வசதிகள் உள்ளிட்டவை பற்றிய தகவல்களும் இடம் பெற்றிருக்கும். பிராப்டைகர்.காம் தளம் மாஸ்டர்பிளானை முப்பரிமாண வடிவில் பார்வையிடும் வசதியை அளிக்கிறது. மேஜிக்பிரிக்ஸ்.காம் தளத்தின் செயலி வீடுகளின் மதிப்பை அறிந்து கொள்ளும் வசதியை அளிக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|