பதிவு செய்த நாள்
10 ஏப்2017
07:42

சேமிப்பது உங்கள் நோக்கமாக இருந்தால் எல்லாவற்றிலும் சேமிக்கலாம் தெரியுமா... மாதந்தோறும், பொருட்களை வாங்குவதற்காக ஷாப்பிங் செல்லும் போதும் சேமிக்கலாம். ஷாப்பிங் மூலம் சேமிப்பது என்றால் மலிவு விலையில் பொருட்களை வாங்குவதும் தரமற்ற பொருட்களை தேடிச் செல்வதும் இல்லை. புத்திசாலித்தனமான உத்திகளை பின்பற்றுவதன் மூலம், தரமான பொருட்களை வாங்குவதோடு, கணிசமாக பணத்தையும் சேமிக்கலாம். இதற்கு உதவக்கூடிய வழிகள்:
புதிது தான் தேவையா?புதியவை மீது ஓர் ஈர்ப்பு உண்டு தான். ஆனால், எல்லா பொருட்களையுமே புதிதாக தான் வாங்க வேண்டுமா... பழைய அல்லது பயன்படுத்திய பொருள், தேவையை நிறைவேற்றும் எனில் புதிதாக வாங்குவதை தவிர்த்தால், விலை குறைவாக இருக்கும். கார், ‘டிவி,’ லேப்–டாப் என பலவற்றுக்கு இது பொருந்தும். பயன்படுத்திய பொருட்களை வாங்குவதில் தயக்கம் இருந்தால், புதிய மாடல்களை தவிர்த்து, பழைய மாடல்களை தேர்வு செய்யலாம்.
சலுகைகளை நாடுவதுசலுகை விலையில் பொருட்களை வாங்குவதன் மூலம் பயன் பெறலாம். கூப்பன்கள் போன்றவை இதற்கு பயன்படும். இ–காமர்ஸ் தளங்களில் ஒரு கண் வைத்திருந்தால் சலுகை அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இ–காமர்ஸ் சலுகைகளை அறிந்து கொள்ள உதவும் கூப்பன் துனியா, கூப்பன் ராஜா போன்ற இணையதளங்களையும் அணுகலாம்.
ஒப்பீடு!பரவலாக அறிந்த உத்தி தான். எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும், முதலில் அதன் விலையை ஒப்பிட்டுப் பாருங்கள். அதே பொருள் வேறு ஒரு இடத்தில் குறைந்த விலையில் கிடைக்கலாம். பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்க உதவும் இணையதளம், செயலிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பேரம் பேசுங்கள்!ஒரே விலை என அறிவிக்கப்பட்ட இடங்களில் பேரம் பேச முடியாது. ஆனால், பேரம் பேச வாய்ப்புள்ள இடங்களில் குறைந்த விலையில் பொருளை வாங்க முடியுமா என முயற்சி செய்யுங்கள். வாங்க நினைத்த பொருளின் விலை அதிகமாக இருந்து பட்ஜெட்டுக்கு பொருந்தவில்லை எனில், அதற்கு ஈடான மாற்று பொருளை வாங்க முடியுமா என பார்க்கலாம்.
கேஷ் பேக்கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் போது, பல நிறுவனங்கள் கேஷ் பேக் சலுகைகளை அறிவிக்கின்றன. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போதும் கேஷ் பேக் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. கேஷ் பேக்கை திறம்பட பயன்படுத்திக் கொள்வதன் மூலம் செலவை குறைக்க முடியும். கிப்ட் கார்டுகளை பயன்படுத்தும் போதும் சலுகை பெறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|