பதிவு செய்த நாள்
10 ஏப்2017
07:44

கச்சா எண்ணெய்
இரு வாரங்களாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் காணப்பட்டது. கடந்த வாரம், அமெரிக்க ராணுவம், சிரியா நாட்டின் விமான தளத்தை ஏவுகணை மூலமாக தாக்கியது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவான நாடுகளிலும், இதன் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதனால், வளைகுடா நாடுகளில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஏற்றுமதி பாதிப்பு அடையும் என்ற கோணத்தில், விலை அதிகரித்து, ஒரு பீப்பாய், 53 டாலர் வரை வர்த்தகமானது. மேலும், எதிர்பார்த்ததை விட, குறைவாக அதிகரித்தது, அமெரிக்க எண்ணெய் இருப்பு (இ.ஐ.ஏ.,). அதாவது, 1.41 மில்லியன் உயர்ந்து, 69.14 மில்லியன் பேரல்கள் இருப்பு உள்ளதாக இ.ஐ.ஏ., தெரிவித்து உள்ளது.ஒபெக் மற்றும் நான் ஒபெக் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம், மே 23ல், ஆஸ்திரியா தலைநகரான, வியன்னாவில் நடக்க இருக்கிறது. அங்கு பிரதிநிதிகள் ஒன்று கூடி உற்பத்தி குறைப்பு சம்பந்தமாக கலந்து ஆலோசிக்க உள்ளனர். உயர்ந்து வரும், அமெரிக்க எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, ஒபெக் நாடுகளுக்கு சவாலாக உள்ளது. பிப்ரவரி மாத எண்ணெய் ஏற்றுமதி 7,46,000 பேரல்கள் ஆகும். இந்நிலை தொடருமானால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது போல, எண்ணெய் சுதந்திரம் என்னும் திட்டம் ஒபெக் நாடுகளுக்கு சவாலை தரும் என்பதில் வியப்பில்லை.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள் (ஏப்.17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,285 3,190 3,430 3,550என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 51.20 49.50 53.75 55.10
தங்கம், வெள்ளி
சர்வதேச சந்தையில், கடந்த வாரம், தங்கம் விலை உயர்ந்தும், வெள்ளி விலை குறைந்தும் காணப்பட்டது. டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது காரணமாக, உள்நாட்டில் தங்கம் விலை கணிசமாகவே உயர்ந்தது.மாதம் ஒருமுறை, அதாவது, கடந்த வெள்ளியன்று வெளிவந்த, அமெரிக்க நாட்டின், என்.எப்.பி., டேட்டா, அதாவது, புதிதாக வேலையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைய, தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. இருப்பினும், வேலையில்லாதவர்களின் விழுக்காடு 4.5 சதவீதமாக குறைந்தது. இது அமெரிக்க நாணயத்திற்கு சாதகமாகவும், தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு பாதகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொதுவாக, ஏதேனும் ஓர் அசாதாரண சூழல், இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் கலவரம், பொருளாதார பின்னடைவு, அரசியல் அதிரடி மாற்றங்கள் போன்ற நிகழ்வுகளால் முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கம் முதலீடு அதிகரிக்கும். அதுபோல, கடந்த வாரம் ஏற்பட்ட அமெரிக்காவின், சிரியா மீதான ஏவுகணை தாக்குதல், தங்கம் விலை உயர்வதற்கு காரணமாகியது.சீனா நாட்டின் தங்கம் இருப்பு விகிதத்தை, அந்நாட்டின் முதன்மை வங்கியான, பீப்பிள்ஸ் பேங்க் ஆப் சீனா வெளியிட்டது. அதன்படி, தங்கத்தின் மதிப்பு, மார்ச் மாதம், 73.74 பில்லியன் டாலர் ஆக குறைந்தது. இது, பிப்ரவரி மாதம் 74.37 பில்லியன் டாலர் ஆகும்.அமெரிக்க வட்டி விகித உயர்வு குறித்த எதிர்ப்பால் ஏற்பட்ட தொய்வும், அரசு கடன் பத்திரங்களின் விலை குறைவும், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரக் காரணமானது. வரும் நாட்களில், வெள்ளி சர்வதேச சந்தையில் 18.50 டாலரை கடந்து செல்லும் நிலையில், மேலும் உயரும். இல்லையெனில், சரிவை சந்திக்கும். அதுபோல, தங்கத்துக்கு 1,275 டாலர் நல்ல ரெசிஸ்டென்ஸ் ஆகும்.
தங்கம்பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள் (ஜூன் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 28,550 28,410 28,850 29,000காம்எக்ஸ் (டாலர்) 1,243 1,230 1,270 1,286
வெள்ளிபொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள் (மே 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 41,010 40,680 42,500 42,980காம்எக்ஸ் (டாலர்) 17.30 16.70 18.50 19.30
செம்புசெம்பு விலையில் கடந்த வாரம் சரிவு காணப்பட்டது. சீன சந்தையில் இதன் தேவை குறைவு மற்றும் தொழிற்சாலையின் உற்பத்தி விகிதம் குறைவு, அமெரிக்க டாலர் உயர்வு போன்ற காரணங்களால் இதன் விலை வீழ்ச்சியடைந்தது. ஜனவரி மாதம், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய சந்தை ஆய்வில், இந்த ஆண்டு செம்பு உற்பத்தி, தேவையை விட, 80 ஆயிரம் டன் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.கடந்த வாரம் நடைபெற்ற, உலகளாவிய, சுரங்க உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய, சிலி நாட்டின் சுரங்க துறை அமைச்சர், ’’உற்பத்தியில் ஏற்பட்ட சிக்கல்கள் தற்போது குறைய துவங்கியுள்ளன. எனினும், இதன் காரணமாக விலை ஏற்றம் உடனே இருக்கும் என கூறமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.ஜப்பான் நாட்டின், பான் பசிபிக் காப்பர் என்ற செம்பு உருக்கு மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம், நடப்பு நிதியாண்டின் ஏப்., – செப்., வரை அதன் உற்பத்தியை 20 விழுக்காடு குறைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு காரணம், ஆலை பராமரிப்பு ஆகும். கடந்த ஆண்டு இதே பருவத்தில் இந்நிறுவனம், 2,93,800 டன் உற்பத்தி செய்தது. இவ்வாண்டு இது குறைந்து, 2,35,200 டன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள் (ஏப்ரல் 17)சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|