பதிவு செய்த நாள்
10 ஏப்2017
07:45

கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங் களில், சர்க்கரை உற்பத்தி பாதித்த நிலையிலும், சர்க்கரை விலை உயர வாய்ப்பில்லை என, கிரிசில் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
இந்தியாவில், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், அதிகளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த பருவத்தில், மஹாராஷ்டிரா, கர்நாடகாவில், சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு, சுங்க வரி இல்லாமல், ஐந்து லட்சம் டன் கச்சா சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி அளித்தது. இருப்பினும், உள்நாட்டில் சர்க்கரை விலை உயர வாய்ப்பில்லை என, கிரிசில் தர மதிப்பீட்டு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் மனிஷ் குப்தா கூறியதாவது:நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, முந்தைய பருவத்தை விட, 40 – 50 லட்சம் டன் சர்க்கரை அதிகமாகும். உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி பாதிப்பு, செல்லாத நோட்டு அறிவிப்பால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், மத்திய அரசு, ஐந்து லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதி அளித்ததுள்ள சூழலிலும், அதன் விலை குறையாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|