பதிவு செய்த நாள்
11 ஏப்2017
02:50

புதுடில்லி : மகிந்திரா நிறுவனம், ஜூம்கார் நிறுவனத்துடன் இணைந்து, எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த மகிந்திரா எலக்ட்ரிக், பேட்டரியால் இயங்க கூடிய, எலக்ட்ரிக் கார் உள்ளிட்ட வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, அந்நிறுவனம், ஜூம்கார் நிறுவனத்துடன் இணைந்து, கார்களை விற்பனை செய்ய உள்ளது.
இதுகுறித்து, மகிந்திரா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுற்றுச்சூழலை பாதிக்காத, பேட்டரி கார்களை, எங்கள் நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிந்திராவின், ‘இ2ஓ பிளஸ்’ என்ற காருக்கு வாடிக்கையாளரிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. ஜூம்கார், பேட்டரியில் இயங்கும் கார்களை ஊக்குவித்து வருகிறது. கர்நாடக மாநிலம், பெங்களூரு; மஹாராஷ்டிரா, புனே மற்றும் டில்லி ஆகிய இடங்களில், எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல தேவை உள்ளது. எனவே, அந்த நகரங்களில், ஜூம்கார் நிறுவனத்துடன் இணைந்து, மகிந்திராவின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|