பதிவு செய்த நாள்
11 ஏப்2017
02:51

சண்டிகர் : ‘‘இந்தியாவில், அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்க, இளைய முதலீட்டாளர்கள் தேவைப்படுகின்றனர்,’’ என, மத்திய தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம், மொகாலியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இது குறித்து அவர் பேசியதாவது: உலகில், பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இதற்காக, இளைய முதலீட்டாளர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களால் தான், தொழில் கட்டமைப்பை வலுப்படுத்த முடியும்; அதிகளவில் வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும்.
சரக்கு மற்றும் சேவை வரி, விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், பல முனை வரி விதிப்பு முறைகள் இருக்காது. இந்தியா முழுவதும், ஒரே சந்தையாக திகழும். இந்திய பொருளாதாரம் வலுப்பெற்று வருவதற்கு, குடும்பங்களே முக்கிய காரணமாக திகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|