பதிவு செய்த நாள்
11 ஏப்2017
02:52

புதுடில்லி : ரெலிகர் ஹெல்த் இன்சூரன்சில் இருந்து, ரெலிகர் என்டர்பிரைசஸ் வெளியேற திட்டமிட்டுள்ளது.
ரெலிகர் என்டர்பிரைசசின் துணை நிறுவனம், ரெலிகர் ஹெல்த் இன்சூரன்ஸ். காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், 2016 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், 503 கோடி ரூபாயை பிரீமியமாக வசூலித்துள்ளது.ரெலிகர் ஹெல்த் இன்சூரன்சின், 80 சதவீத பங்குகளை, ரெலிகர் என்டர்பிரைசஸ் கொண்டுள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் பேங்க் ஆகியவை, தலா, 5 சதவீத பங்குகளை கொண்டுள்ளன. இந்நிலையில், ரெலிகர் இன்சூரன்சில் தன் வசம் உள்ள பங்குகளை விற்க, ரெலிகர் என்டர்பிரைசஸ் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, ரெலிகர் இன்சூரன்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில், ரெலிகர் என்டர்பிரைசஸ், 1,040 கோடி ரூபாய் மதிப்பிலான, 80 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. தற்போது, அந்த பங்குகளை, ட்ரூ நார்த் மேனேஜர்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரெலிகர் இன்சூரன்சில் இருந்து, ரெலிகர் என்டர்பிரைசஸ் வெளியேறும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|