பதிவு செய்த நாள்
11 ஏப்2017
02:52

புதுடில்லி : கடந்த, 2016, அக்., – டிசம்பர் வரையிலான காலாண்டில், மொபைல் போன் சேவை கட்டணம் தொடர்பாக, பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செலுலார் நிறுவனங்கள் மீது, ‘டிராய்’ அமைப்பில், சந்தாதாரர்கள் அதிகம் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம், கோல்கட்டா, ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் மாநிலங்களில், ஏர்டெல் நிறுவனத்தின், ‘2ஜி’ மொபைல் போன் சேவையில் உள்ள ப்ரிபெய்டு சந்தாதாரர்கள், அதிக அளவில், ஏர்டெல் மீது, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், வோடபோன் நிறுவனம் மீது அதிக புகார்கள் வந்துள்ளன. ஐடியா செலுலார் நிறுவனம் மீது, வட கிழக்கு தொலை தொடர்பு வட்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், புகார் தெரிவித்துள்ளனர்.
‘கால் டிராப்’ எனப்படும் அழைப்பு துண்டிப்பு, மோசமான தொலை தொடர்பு வசதி போன்றவற்றுக்காக, ஏர்டெல் நிறுவனத்திற்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளருக்கு, அட்வான்ஸ் தொகையை இழுத்தடித்து தருவதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முதலிடத்தில் உள்ளது. டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம், அதன் ஆறு தொலை தொடர்பு வட்டங்களில், டிபாசிட் விதிமுறைகளை மீறியுள்ளதாக, டிராய் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|