பதிவு செய்த நாள்
11 ஏப்2017
23:46

புதுடில்லி : மகிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனம், பயன்படுத்திய எலக்ட்ரிக் கார்களை வாங்கி, விற்க முடிவு செய்துள்ளது.
மகிந்திரா குழுமத்தை சேர்ந்த மகிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ், பயன்படுத்திய மோட்டார் வாகனங்களை வாங்கி, விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், தற்போது, பயன்படுத்திய எலக்ட்ரிக் கார்களையும் விற்க உள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நாகேந்திரா பல்லே கூறியதாவது: எங்கள் நிறுவனம், அமைப்பு சார்ந்த பிரிவின் கீழ், பல தரப்பினரிடம் இருந்து, பயன்படுத்திய வாகனங்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறது. தற்போது, சுற்றுச்சூழலை பாதிக்காத வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களை வாங்குவோருக்கு, மத்திய அரசும் மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால், மகிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து, பயன்படுத்திய எலக்ட்ரிக் கார்களையும் வாங்கி, விற்க உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|