பதிவு செய்த நாள்
11 ஏப்2017
23:46

மும்பை : பினோ பேடெக், ‘பேமேன்ட் பேங்க்’ எனப்படும் சிறிய வங்கி சேவையை துவக்க திட்டமிட்டு உள்ளது.
பினோ பேடெக் நிறுவனத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ., குழுமம், 20 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம், பேமன்ட் வங்கி சேவையில் ஈடுபட, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அதற்கு, ஒப்புதல் கிடைத்துள்ளதை அடுத்து, பினோ பேடெக், சிறிய அளவிலான வங்கி சேவையில் ஈடுபட உள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிஷி குப்தா கூறியதாவது:
எங்கள் நிறுவனம், வங்கி துவக்குவதற்கான இறுதி கட்ட அனுமதி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, கடந்த மாதம் கிடைத்தது. வங்கி செயல்பாடுகளை துவக்கும் முன், அனுமதி பெற வேண்டும். தற்போது, அந்த அனுமதி வர வேண்டி உள்ளது. இதையடுத்து, இரு மாதங்களில், பினோ பேடெக், பேமன்ட்ஸ் வங்கியை துவக்க திட்டமிட்டு உள்ளது. அதற்கு தேவையான அனைத்து உதவிகளும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிடம் இருந்து பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஏர்டெல் பேமென்ட் வங்கி, வாடிக்கையாளர்கள் செலுத்தும் டிபாசிட் தொகைக்கு, 7 சதவீத வட்டி தரும் நிலையில், பினோ பேடெக், 4 சதவீதம் வட்டி தர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|