பதிவு செய்த நாள்
11 ஏப்2017
23:47

மும்பை : கடந்த சில மாதங்களாக, பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், அவற்றின் உற்பத்தி வளர்ச்சி சற்று குறைந்திருப்பது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
‘பிக்கி’ எனப்படும், இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக கூட்டமைப்பு, சிமென்ட், ரசாயனம் உணவு பொருட்கள் உட்பட, தயாரிப்பு துறையைச் சேர்ந்த, 320 பெரிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: கடந்த 2016 – 17ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், தயாரிப்பு துறையின் உற்பத்தி, முந்தைய, அக்., – டிசம்பர் காலாண்டை விட, சற்று குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, அதிகரித்துள்ள தயாரிப்பு செலவினம், ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை தான் காரணம். இதே காலத்தில், உற்பத்தி குறையும் என கருத்து தெரிவித்தோரின் பங்கு, பாதியாக குறைந்து உள்ளதால், வரும் மாதங்களில், தயாரிப்பு துறையின் வளர்ச்சி திடமாக இருக்கும் என, தெரிகிறது.
இதே காலத்தில், அதிக வளர்ச்சியை காண்போம் என தெரிவித்த நிறுவனங்களின் பங்கு, 48 சதவீதத்தில் இருந்து. 46 சதவீதமாக குறைந்துள்ளது. அதுபோல, வளர்ச்சி குறையும் என தெரிவித்தோரின் பங்கு, 29 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக சரிவடைந்து உள்ளது. எனினும், ஏற்றுமதி குறையும் என தெரிவித்த நிறுவனங்களின் பங்கு, 18 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலப் பொருட்கள், போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்துள்ளதால், தயாரிப்பு செலவினம் உயர்ந்து, சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்க முடியாமல் உள்ளதாக, தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|