பதிவு செய்த நாள்
11 ஏப்2017
23:48

ஐதராபாத் : கோத்ரெஜ் குழுமத்தின் தலைவர் அதி பி.கோத்ரெஜ் கூறியதாவது: ஏப்., 1ல் அறிமுகமாக வேண்டிய, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை 1க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்த வரியை அக்., 1க்கு தள்ளி வைக்க வேண்டும் என்கிறார்.
ஜி.எஸ்.டி., அமலுக்கான அவசர சட்டம், செப்.,ல் காலாவதியாகி விடும். அதற்கு முன், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த வேண்டும். அதனால், அதை தள்ளி வைக்கக் கூடாது. குறிப்பாக, தற்போது வரி ஏய்ப்பு செய்து வருவோர் தான், ஜி.எஸ்.டி.,யை தள்ளி வைக்க வேண்டும் என்கின்றனர். இதன் மூலம், வரி செலுத்துவதை அவர்கள் தவிர்க்க பார்க்கின்றனர். இது, மிகவும் கேலிக்குரியது.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு, ஜி.எஸ்.டி., பல வகைகளில் உதவும். முதலாவதாக, வரி ஏய்ப்பு தடுக்கப்படும். அரசு வருவாய் உயரும். மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். வரி விதிப்பு, தற்போது உள்ளதை விட, குறைவாக இருக்கும் என, கருதுகிறேன். எனினும், அடுத்த மாதம் அரசு அறிவிப்பின்போது தான், உறுதியாக தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|