பதிவு செய்த நாள்
11 ஏப்2017
23:49

நியூயார்க் : அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: கடந்த ஆண்டு, கணினி நாசக்காரர்கள், நியூயார்க் மத்திய வங்கியில் உள்ள, வங்கதேச மத்திய வங்கி கணக்கில் நுழைந்து, 8.10 கோடி டாலரை சுருட்டினர். இது போன்ற சைபர் தாக்குதல், இந்தியாவின் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில், கடந்த ஆண்டு, ஜூலையில் நடத்தப்பட்டது. கணினி நாசக்காரர்கள், இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து அனுப்பியது போன்ற மின்னஞ்சலை, யூ.பி.ஐ.,க்கு அனுப்பியுள்ளனர்.
அதை திறந்த வங்கி அதிகாரி, அதனுடன் இணைப்பட்ட கோப்பை, பதிவிறக்கம் செய்துள்ளார். இதையடுத்து, வங்கியின், சர்வதேச பணப் பரிவர்த்தனைக்கான ரகசிய குறியீடுகள், நாசகாரர்களின் கணினிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. அந்த குறியீடுகள் மூலம், நியூயார்க், சிட்டி வங்கியில் உள்ள, யூ.பி.ஐ., கணக்கில், 17 கோடி டாலர், அதாவது, இந்திய மதிப்பில், 1,176 கோடி ரூபாய் அனுப்ப, நாசக்காரர்கள் முயன்றுள்ளனர். நல்லவேளையாக, யூ.பி.ஐ., இந்த பரிவர்த்தனையை உடனடியாக மோப்பம் பிடித்து, பணம் கைமாறுவதை தடுத்து நிறுத்தி விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|