பதிவு செய்த நாள்
11 ஏப்2017
23:50

புதுடில்லி : கடந்த மார்ச் மாதத்தில், உள்நாட்டில், 2.82 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், 2.56 லட்சமாக இருந்தது. கார்கள் விற்பனையை பொறுத்தவரை, 8.17 சதவீதம் உயர்ந்து, 1.75 லட்சத்தில் இருந்து, 1.90 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், மோட்டார் சைக்கிள் விற்பனை, 3.33 சதவீதம் குறைந்து, 9.46 லட்சத்தில் இருந்து, 9.15 லட்சமாக சரிவடைந்துள்ளது. ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 14.67 லட்சத்தில் இருந்து, 14.71 லட்சமாக உயர்ந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை, 87 ஆயிரத்து, 257 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், அனைத்து வகையைச் சேர்ந்த வாகனங்கள் விற்பனை, 18.80 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், 18.55 லட்சமாக குறைந்திருந்தது. கடந்த நிதியாண்டில், உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை, 9.23 சதவீதம் உயர்ந்து, 27.89 லட்சத்தில் இருந்து, 30.46 லட்சமாக அதிகரித்துள்ளது. அதில், கார்கள் விற்பனை, 20.25 லட்சத்தில் இருந்து, 21.02 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|