பதிவு செய்த நாள்
20 ஏப்2017
00:10

புதுடில்லி : கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், இந்தியாவில் விற்பனையான, ‘டாப் – 10’ பயணிகள் கார் மாடல்களில், மாருதி சுசூகி நிறுவனத்தின், ஏழு கார்கள் இடம் பிடித்துள்ளன.
இது குறித்து, இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த நிதியாண்டில், அதிகமாக விற்பனையான, 10 கார்களில், மாருதியின், 7 மாடல்கள் இடம் பிடித்துள்ளன; இது, முந்தைய, 2015 – 16ம் நிதியாண்டில், 6 ஆக இருந்தது. கடந்த நிதியாண்டில், அதிகம் விற்பனையான மாடல்களில், மாருதியின், ‘ஆல்டோ’ கார் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த மாடல் கார் விற்பனை, முந்தைய நிதியாண்டை விட, 8.27 சதவீதம் குறைந்து, 2,63,422லிருந்து, 2,41,635 ஆக சரிவடைந்து உள்ளது. இருந்த போதிலும், தொடர்ந்து, 13வது ஆண்டாக, ஆல்டோ கார், விற்பனையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதே காலத்தில், மாருதியின், ‘வேகன் – ஆர்’ நான்காவது இடத்தில் இருந்து, இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த, ‘டிசையர்’ மூன்றாவது இடத்திற்கு இறங்கியுள்ளது. இந்த வரிசையில், நான்காவது இடத்தை, மாருதி சுசூகியின், ‘ஸ்விப்ட்’ கார் பிடித்துள்ளது. போட்டி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின், ‘கிராண்ட் ஐ 10 – எலைட் – ஐ 20’ ஆகிய மாடல் கார்கள், முறையே, ஐந்து மற்றும் ஆறாம் இடத்தை பிடித்துள்ளன. இந்த வரிசையில், மாருதியின், ‘பலேனோ’ மாடல் கார், ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில், எட்டாவது இடத்தை, ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின், ‘க்விட்’ பயணிகள் கார் பிடித்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின், ‘விட்டாரா பிரெஸ்ஸா’ மற்றும் ‘செலிரியோ’ மாடல் கார்கள், முறையே, ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தை பிடித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|