பதிவு செய்த நாள்
21 ஏப்2017
00:00

மும்பை : டாடா குழுமத்தைச் சேர்ந்த, டாடா ஸ்டீல் நிறுவனம், உருக்கு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இந்தாண்டில் அதிகளவில் ஏற்றுமதியை மேற்கொள்ளும் நோக்கில், தென் கிழக்கு ஆசிய சந்தையில், கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டி.வி.நரேந்திரன் கூறியதாவது: தென் கிழக்கு ஆசிய சந்தை, மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருவதால், அங்கு, நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்ய ஆராய்ந்து வருகிறோம். மேலும், நடப்பு ஆண்டில், ஏற்றுமதியை அதிகரிக்கவும், நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய உருக்கு துறையின் வளர்ச்சி, உலகளவில், உருக்கு ஆலைகளுக்கான இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, சிறந்த முதலீட்டு வாய்ப்பாக அமையும். இது, இந்தியாவில் அதிகமுதலீட்டை ஈர்க்கும். இவ்வாறு அவர் கூறினார். டாடா ஸ்டீல் நிறுவனம், 2013 – 14ம் ஆண்டின், ஒருங்கிணைந்த சிறந்த உருக்கு ஆலைக்கான, பிரதமரின் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|