பதிவு செய்த நாள்
21 ஏப்2017
00:01

மும்பை : எல்.ஐ.சி., எனப்படும், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், கடந்த நிதியாண்டில், 1.24 லட்சம் கோடி ரூபாயை, முதல் ஆண்டு பிரீமியமாக வசூலித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 97 ஆயிரத்து, 777 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.
இதையடுத்து, உள்நாட்டில், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில், முதல் ஆண்டு பிரீமீய வசூலில், எல்.ஐ.சி.,யின் பங்கு, 76.09 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய ஆண்டில், 70.61சதவீதமாக இருந்தது. இதே காலத்தில், குழு மற்றும் ஓய்வூதிய காப்பீட்டு திட்டங்கள் மூலம் வசூலித்த பிரீமிய தொகை, 78 ஆயிரத்து, 805 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனம், கடந்த ஆண்டில், 2.01 கோடி, புதிய காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்து உள்ளது. இது, முந்தைய ஆண்டில், 2.05 கோடி காப்பீட்டு திட்டங்களாக அதிகரித்து இருந்தது. இந்நிறுவனத்தின் மொத்த காப்பீட்டு திட்டங்களில், ஜீவன் அக் ஷய் என்ற ஓய்வூதிய திட்டத்தின் பங்கு மட்டும், 60 சதவீதம் என்றளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|