பதிவு செய்த நாள்
21 ஏப்2017
00:01

புதுடில்லி : நாட்டில், பல்வேறு இடங்களில் உள்ள, சகாரா குழுமத்தின், 7,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்க, டாடா, அப்பல்லோ, அதானி, பதஞ்சலி உட்பட, பல நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முறைகேடாக நிதி திரட்டிய வழக்கில், சகாரா குழுமம், அதன் சொத்துகளை விற்று, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திடம், 10,500 கோடி ரூபாய், ‘டிபாசிட்’ செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, டில்லி, புனே, லக்னோ, கோவை உள்ளிட்ட நகரங்களில், சகாராவுக்குச் சொந்தமான, 30 அசையா சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளன. இதில் பங்கு கொள்ள, முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன. இது குறித்து, ஏல விற்பனை மேற்கொள்ளும், நைட் பிராங்க் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சகாரா குழுமத்தின் சொத்து விற்பனை குறித்து வெளியிட்ட விளம்பரத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஓமக்ஸ், எல்டெகா உள்ளிட்ட, பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், வெளிநாடுகளில் உள்ளவர்களும், ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் விண்ணப்பித்துள்ளது. லக்னோவில் உள்ள சகாரா மருத்துவ மனையை வாங்க, சென்னையைச் சேர்ந்த அப்பல்லோ மருத்துவமனை விண்ணப்பம் செய்துள்ளது. மொத்தம், 59 நிறுவனங்களிடம் இருந்து, 163 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவை, விரைவில் பரிசீலிக்கப்பட்டு, ஏலத்தில் பங்கேற்க தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சகாரா குழுமத்தின் சொத்துகளை வாங்க, டாடா, அதானி, பதஞ்சலி குழுமங்களும் விருப்பம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|