பதிவு செய்த நாள்
21 ஏப்2017
00:02

புதுடில்லி : மெர்ஜர்மார்க்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜன.,– மார்ச் வரையிலான காலாண்டில், 1,790 கோடி டாலர் மதிப்பிற்கு, நிறுவனங்கள் இடையே, இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் திட்டங்கள் கையெழுத்தாகி உள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட, 920 கோடி டாலர் அளவிலான, ஒப்பந்த மதிப்பை விட, இரு மடங்கு அதிகம் ஆகும். அதே சமயம், இதே காலத்தில், நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கை, 110லிருந்து, 76 ஆக குறைந்துள்ளது.
ஜப்பான் தவிர்த்த, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்நடவடிக்கைகளில், மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் பங்கு, 2013 முதல், வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. மதிப்பீட்டு காலாண்டில்,இவ்வளர்ச்சி, 13.2 சதவீதமாக உயர்ந்து உள்ளது. நடப்பாண்டின், முதல் காலாண்டில், தொலை தொடர்பு துறையில், 1,360 கோடி டாலர் மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில், வோடபோன் – ஐடியா செல்லுலார் இணைப்பு ஒப்பந்தம், 1,270 கோடி டாலர் மதிப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலத்தில், 6 கோடி டாலர் மதிப்பில், இரு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|