பதிவு செய்த நாள்
21 ஏப்2017
00:03

புதுடில்லி : இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’ வெளியிட்டுள்ள அறிக்கை: ஆஸ்திரேலிய அரசு, வெளிநாட்டினரை, நான்கு ஆண்டுகள் வரை, பணிஅமர்த்த உதவும், ‘457 – விசா’வை ரத்து செய்துள்ளது, ஆச்சரியம் அளிக்கிறது. இதற்கு மாற்றாக, புதிய கட்டுப்பாடுகளுடன் விசா அறிமுகப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகெங்கும், உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்களால், அன்னியரை பணிக்கு அமர்த்துவதில், கடுமையான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆஸி., அரசு ரத்து செய்துள்ள விசாவில், ஏராளமான தொழில் பிரிவுகள் அடங்கியுள்ளதால், அவற்றை பாகுபடுத்தி நிர்வகிப்பது கடினமாக இருக்கும்.
முதற்கட்ட ஆய்வில், ஆஸி., அரசின் முடிவால், இந்திய ஐ.டி., துறை பணியாளர்களுக்கு, பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என, தெரிய வந்துள்ளது. மத்திய அரசு மற்றும் ஆஸி., அரசுகளை தொடர்பு கொண்டு, புதிய நடைமுறைகள் குறித்து விபரமாக அறிந்து, அதற்கேற்ப, ஐ.டி., துறையின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|