பதிவு செய்த நாள்
21 ஏப்2017
00:04

புதுடில்லி : மாநில அரசின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், பெரிய அளவிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற, நேரடியாக, வெளிநாட்டு அரசு அமைப்புகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதற்கான, புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது. இதற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், மாநிலங்களில், நிதி பற்றாக்குறையால் செயல்படுத்த முடியாமல் உள்ள, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, விடிவு காலம் பிறக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போதையை விதிமுறைப்படி, மாநில அரசுகளின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள், வெளிநாட்டு அரசு முகமை அமைப்புகளிடம் இருந்து, நேரடியாக கடன் பெற அனுமதியில்லை. இந்த கட்டுப்பாடு நீக்கப்படும்பட்சத்தில், வலுவான நிதிநிலை கொண்ட, மாநில அரசு பொதுத் துறை நிறுவனங்கள், நேரடியாக, அன்னிய முகமை அமைப்புகளிடம் கடன் பெற்று, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளலாம்.
மாநில அரசை சார்ந்திராமல், வட்டியுடன், கடன் தவணையை முகமை அமைப்புகளுக்கு, நேரடியாக செலுத்தலாம்.இந்த திட்டத்தால், மாநில அரசுகளின் நிதிச் சுமையும் குறைக்கும். அன்னிய முகமை அமைப்புகளிடம், மாநில பொதுத் துறை நிறுவனங்கள் பெறும் கடனுக்கு, மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் வழங்கும். ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 3 சதவீதம் வரையிலான நிதி பற்றாக்குறையை சமாளிக்க, அரசு கடன் பெறலாம்.
இந்த வரம்பை தாண்டிய மாநில அரசுகளுக்கு, அன்னிய கடன் பெற அனுமதி கிடையாது. இதன் காரணமாகவே, நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ள பல மாநிலங்களில், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்னைக்கு, புதிய விதிமுறை தீர்வளிக்கும். மேலும், 14வது நிதிக் குழு, சில நிபந்தனைகளின் அடிப்படையில்,மாநிலங்கள் கூடுதலாக, 0.50 சதவீதம் கடன் பெற அனுமதிக்கலாம் என, தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் வரம்பு, மாநில அரசின் கீழ் உள்ள நிறுவனங்கள், அன்னிய நிதியுதவியை பயன்படுத்தி, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில்..சாலை, துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 43 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இதில், 70 சதவீதம், மின்சாரம், சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|